
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கும் தோஷங்களுக்கும் காரணமாக திகழ்பவர்கள் நவகிரகங்கள் தான். நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கடன் தொடர்பான தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் நாம் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த தீபத்தை ஏற்றும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு செல்வம் தொடர்பான எந்த தடைகளும் ஏற்படாது. தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குரிய செல்வத்தை பெற்று சிறப்புடன் வாழ்க்கையை வாழ்வார்கள். அதனால் நம்முடைய வாழ்க்கையில் செல்வம் தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அந்த பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாம் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் கடன் தோஷத்தை நீக்கக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அன்று ஏற்ற ஆரம்பிக்க வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பொதுவாக நாம் தீபம் ஏற்ற வேண்டும் என்றால் ஒரு தாம்பாள தட்டை பயன்படுத்தி அதில் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றவும் அல்லவா? ஆனால் இந்த கடன் தொடர்பான பிரச்சினையும், நவகிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷமும் நீங்க வேண்டும் என்றால் நாம் தட்டில் வைத்து தீபம் ஏற்றாமல் சுளகில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அதாவது அரிசி கோதுமை போன்றவற்றை பிடைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சுளகு என்று கூறக்கூடிய முரத்தில் தான் இந்த தீபத்தை நாம் ஏற்ற வேண்டும்.
செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம் இயலாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த தீபத்தை ஏற்றலாம். ஒரு முரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே சிறிதளவு பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். இந்த பச்சரிசிக்கு மேல் வலம்புரி சங்கு மற்றும் இடம்புரி சங்கு என்று இரண்டு சங்குகளை வாங்கி வைக்க வேண்டும். இந்த சங்குகள் நன்றாக சுத்தம் செய்த சங்குகளாக இருக்க வேண்டும். பன்னீரை ஊற்றி கழுவி காய வைத்து பிறகு அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். இதில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். பிறகு தங்களுக்கு தெரிந்த பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் மந்திரத்தை கூறி பணம் தொடர்பான எப்பேற்பட்ட தோஷங்கள் இருந்தாலும் அவை விலக வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். தினமும் பழைய பச்சரிசியை மாற்றி புதிய பச்சரிசியை வைக்க வேண்டும். பழைய பச்சரிசியை சமைப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம், காகம் குருவிகளுக்கு தானமாகவும் போடலாம். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் யார் ஒருவர் வலம்புரி மற்றும் இடம்புரி சங்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்தவித செல்வ தடைகளும் உண்டாகாது.
இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் அபிஜித் நட்சத்திர பரிகாரம்
பெருமாள் மற்றும் மகாலட்சுமிக்கு உரிய பொருளான இந்த பொருளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கடன் தொடர்பான அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.