- Advertisement -

கடன் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பல எதிர்மறையான செயல்கள் நடைபெறும். அந்த எதிர்மறையான செயல்களில் இருந்து வெளியே வருவதற்கு பல வழிகளில் நாம் போராட வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட எதிர்மறை செயல்களில் ஒன்றுதான் கடன் வாங்குவது அல்லது கொடுப்பது. கடன் வாங்கினாலும் கொடுத்தாலும் அதை முறையாக பராமரித்து விரைவிலயே கடன் தொடர்பான எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலைக்கு சென்று விட்டோம் என்றால் அதனால் நம்முடைய வாழ்க்கையில் பல எதிர்மறை பாதிப்புகள் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கல் உப்பை வைத்து செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க பரிகாரம்

நாம் ஒவ்வொருவருக்கும் நேர்மறை ஆற்றல்கள் எதிர்மறை ஆற்றல்கள் என்று இரண்டு ஆற்றல்கள் நம் உள்ளேயே இருக்கும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் பொழுது நாம் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே சிந்தித்து அதை செயலாற்றுவோம். அதை தவிர்த்து எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்மறையான செயல்களையே சிந்தித்து செயலாற்றி அதனால் பல பிரச்சினைகளுக்கும் ஆளாவோம். அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விளக்குவதற்கும் செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாகவே நாம் எந்த அளவிற்கு நேர்மறையாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வீடும் நேர்மறையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இரவு படுத்து நிம்மதியாக உறங்கக்கூடிய இடம் என்றால் அது நம்முடைய வீடு மட்டுமே. அந்த வீடு நேர்மறையாக இருந்தால் மட்டுமே தான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் நமக்கு என்னதான் நேர்மறை ஆற்றல்கள் இருந்தாலும் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. இந்த நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக வேண்டும்.

எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க கூடிய இடம் என்று சில இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களை நாம் நேர்மறை ஆற்றலாக மாற்றினோம் என்றாலே நம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். நமக்கு தேவையான விஷயங்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத விஷயங்களான எதிர்மறை ஆற்றல்களை விலக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படி இருக்கும் பொழுது நம்முடைய வீட்டிலும் தேவையான பொருட்களை வைத்துவிட்டு தேவையில்லாத பொருட்களை நீக்கி விட வேண்டும்.

- Advertisement -

பலரும் தங்களுடைய வீட்டில் தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைப்பதற்கு என்றே ஒரு அறையையோ அல்லது அலமாரியோ வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் தான் எதிர்மறை ஆற்றல் என்பதும் அதிகமாகவே இருக்கும். இதே போல் நம்முடைய உடலில் இருந்து வெளிவரும் கழிவுகளை நாம் எதிர்மறை ஆற்றல்கள் என்றுதான் கூற வேண்டும். இந்த கழிவுகளை வெளியேற்றும் இடமாக நம் வீட்டு குளியலறையும் கழிவறையும் இருக்கிறது. அதனால் அந்த இடத்திலும் எதிர்மறை ஆற்றல்கள் என்பது அதிகமாகவே இருக்கும்.

இந்த இரண்டு இடங்களிலும் ஒரு கிளாஸில் கல் உப்பை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். எந்த நாளில் இந்த கல்லுப்பை நாம் அந்த இடத்தில் வைக்கிறோமோ அடுத்த வாரம் அதே நாளில் அந்த கல்லுப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் புதிதாக கல்லுப்பை மாற்றி வைக்க வேண்டும். இப்படி எந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் கல் உப்பை வைப்பதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் பொழுது நமக்கும் அதனுடைய தாக்கம் ஏற்பட்டு நாம் எதிர்மறையாக செய்த செயல்கள் அனைத்தும் நேர்மறையாக மாறும். அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதற்குரிய நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:அக்சய பலன் தரும் ஆடி கடைசி ஞாயிறு

இந்த எளிமையான கல்லுப்பு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கடன் மட்டுமல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -