- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅக்சய பலன் தரும் ஆடி கடைசி ஞாயிறு

அக்சய பலன் தரும் ஆடி கடைசி ஞாயிறு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் திதிகள் என்பது வரும். வளர்பிறை திதிகள், தேய்பிறை திதிகள் என்று இரண்டு திதிகள் வரும். அந்த திதிகள் வரக்கூடிய கிழமையை பொறுத்து பலன்கள் என்பது மாறுபடும். அந்த வகையில் நாளைய தினம் கடைசி ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை என்றாலே அது சூரிய பகவானுக்குரிய கிழமை. நாளை வரக்கூடிய திதி என்பது சப்தமி திதி இந்த சப்தமியும் சூரிய பகவானுக்குரிய திதியாக கருதப்படுகிறது. அதனால் நாம் செய்யக்கூடிய வழிபாடானது பல மடங்கு பலனை நமக்கு தரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அக்சய பலன் தரும் ஆடி கடைசி ஞாயிறு

நாளைய தினம் ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி ஞாயிற்றுக்கிழமை. சூரிய பகவானுக்குரிய சப்தமி திதி இருக்கிறது. இதோடு சேர்த்து நரசிம்மர் உதயமான சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. இப்படி பல மடங்கு பலன்களை தரக்கூடிய நாளாக நாளைய தினம் விளங்குகிறது. இந்த நாளில் நாம் அம்மனை வழிபட வேண்டும். அதோடு குலதெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு சேர்த்து சப்தமி திதி என்பதால் சூரிய பகவானையும், சுவாதி நட்சத்திரம் என்பதால் நரசிம்மர் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் ஒரு சேர வரக்கூடிய இந்த கிழமையில் நாம் எந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த வழிபாட்டின் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்களை மட்டும் தான் நாம் மகா நட்சத்திரம் என்று கூறுகிறோம். அந்த வரிசையில் சுவாதி நட்சத்திரமும் இருக்கிறது. அதனால் அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய செயலால் நமக்கு அதிக அளவில் புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையுடன் வரக்கூடிய சப்தமி திதி என்பதால் அதை நாம் பானு சப்தமி என்று கூறுகிறோம். இன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. மேலும் சூரிய பகவானை பார்த்தவாறு “ஓம் நமோ பகவதே சூரியநாராயணாய நமஹ” என்று 12 முறை கூற வேண்டும் 12 முறை சூரிய பகவானை வணங்க வேண்டும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் சுவாதி நட்சத்திரம் என்பதால் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் நரசிம்மரை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. மேலும் கடன் பிரச்சினை தீர ருண விமோசன ஸ்லோகத்தை மூன்று முறை நாளைய தினம் பாராயணம் செய்பவர்களுக்கு 48 நாட்கள் படித்த பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய வேஷ்டி, துண்டு, 1 1/4 கிலோ கோதுமை, வெற்றிலை, பாக்கு, சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பழம், சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பூக்கள், தட்சிணையாக 101 ரூபாய் என்று இவை அனைத்தையும் வைத்து ஏதாவது ஒரு ஐயருக்கு தானமாக தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும் மேலும் ஐஸ்வரியம் பெருகும்.

இதையும் படிக்கலாமே:கஷ்டங்களை அதிகரிக்கும் செயல்கள்

அற்புதமான தினமான திகழக்கூடிய நாளைய தினத்தில் மேற் சொன்ன முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான சம்பத்துகளும் கிடைக்கப்பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்