- Advertisement -

கஷ்டங்கள் விலக கால பைரவர் வழிபாடு

- Advertisement -

இன்று ஞாயிற்றுக்கிழமை. 14-9-2025 காலை 9:16 மணி முதல் அஷ்டமி திதி துவங்குகிறது. நாளை திங்கட்கிழமை காலை 7:00 மணி வரை இந்த அஷ்டமி திதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதியானது ஞாயிற்றுக்கிழமையில் வருவது அதிசிறப்பு.

ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்து, உங்களுடைய கஷ்டங்கள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் எப்பேர்ப்பட்ட கஷ்டமும் உங்களை விட்டு படிப்படியாக விளக்கும். இது நிதர்சனமான உண்மை.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடன் சுமையால் வாடி வதங்கி கஷ்டப்படுபவர்கள், பணக்கஷ்டத்தால் அல்லோல படுபவர்கள் எல்லாம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை கட்டாயம் பைரவர் சன்னிதானத்தில் அமர்ந்து பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய மிகப்பெரிய கடனும் மிக சுலபமாக அடையும்.

கடன் தீர பைரவர் பரிகாரம்

முதலில் 8 மிளகை எடுத்து, ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு பைரவர் சன்னிதானத்தை 8 முறை வலம் வர வேண்டும். இரண்டு மண் அகல் விளக்குகளில், 2 மிளகு முடிச்சு போட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்றால், தனித்தனியாக இரண்டு சிவப்பு நிற துணிகளில், தனி தனியாக எட்டு மிளகு வைத்துக் கூட முடிச்சு போட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு “கால பைரவரே துணை!” என்ற ஒரு வரி மந்திரத்தை சொல்லி நம்பிக்கையோடு காலபைரவர் சன்னிதானத்தை 8 முறை வலம் வந்த பிறகு, மிளகு மூட்டையை அப்படியே மண் அகல் விளக்கில் நல்லெண்ணெயில் போட்டு நனைத்து, தீபம் ஏற்றி பைரவர் சன்னிதானத்தில் வைத்து, கடன் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டால் எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும் அது படிப்படியாக குறையும்.

(காலபைரவரை எட்டு முறை வலம் வரும்போது மந்திரத்திற்கு கணக்கு வேண்டாம்). மனதிற்குள் அந்த ஒரு மந்திர வார்த்தையை மட்டும் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே இருங்கள் போதும். அந்த ஒரு வார்த்தை தான் உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி விடும்.

- Advertisement -

எதிரி தொல்லை விலக, கண்திருஷ்டி விலக, ஏவல் பில்லி சூனியத்திலிருந்து விளக்கவும் இன்றைய தினம் காலபைரவரை வழிபாடு செய்யலாம். பொதுவாக 27 மிளகு வைத்து கால பைரவருக்கு விளக்கு போட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதுவும் தவறு கிடையாது. இருப்பினும் அஷ்டமி என்றால் 8 என்ற எண்ணைக் குறிக்கிறது.

8 மிளகை கையில் வைத்துக்கொண்டு, காலபைரவரை நம்பிக்கையோடு நினைத்து கால பைரவர் தான் துணை என்ற மந்திரத்தை சொல்லி, காலபைரவர் சன்னிதானத்தை வலம் வந்து இந்த விளக்கை ஏற்றும் போது இதற்கான சக்தி அபரிவிதமாக உங்களை வந்து சேரும் என்பது நம்பிக்கை.

உங்களுக்கும் வாழ்நாளில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கிறது, தீர்க்க முடியாத கடன் சுமைகள் இருக்கிறது என்றால் மேல் சொன்ன விஷயங்களை இன்று நம்பிக்கையோடு செய்து பாருங்கள். சாதாரணமாக தேய்பிறை அஷ்டமி திதி அன்று இந்த பரிகாரத்தை செய்தாலே மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன்களை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய அஷ்டமி திதி பல மடங்கு சக்தி வாய்ந்தது. இந்த நாளில், இந்த அரிய தகவலை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மனமகிழ்ச்சியுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -