- Advertisement -
மந்திரம்

காமாட்சி ஸ்தோத்திரம்

உலகமே பணத்தின் பின்னே தான் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் இல்லறத்தில் இணைந்து வாழும் ஆணும், பெண்ணும் தங்களின் பொருளாதார நிலை உயரவும், தங்களின் வாரிசுகளுக்கு சொத்துக்களை சேர்க்கவும் மிக கடுமையாக உழைக்கின்றனர். என்ன தான் கடுமையாக உழைத்தாலும் தங்களின் இந்த விருப்பங்கள் சுலபத்தில் நிறைவேறுவதில்லை. எல்லாவற்றிற்கும் தெய்வத்தின் ஆசிகள் இருக்க வேண்டும். மேற்கூறிய நிலையில் இருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் காமாட்சி ஸ்தோத்திரம் இதோ.

காமாட்சி ஸ்தோத்திரம்

ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே
ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ

- Advertisement -

மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ
காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!

காஞ்சியில் கொலுவீற்றிருக்கும் அன்னை காமாட்சியை போற்றும் ஸ்தோத்திரம் இது. செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமி தினங்களில் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, சர்க்கரை பொங்கலை நிவேதனம் செய்து 108 முறை மனமொன்றி இந்த ஸ்தோத்திரத்தை படித்து வந்தால் உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும். அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் கூடி வரும்.

- Advertisement -

சிவபெருமானின் உடலில் ஒரு பாதியாகிய பார்வதி தேவி கருணை நிறைந்தவள், தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் கொடுப்பவள். தனது பக்தர்களுக்கு தாய் போன்று இருந்து அவர்களை அரவணைப்பதால் அம்மன் என பக்தர்களால் அழைக்கப்படுகிறாள். உலகம் இயங்க ஆதாரமாக இருக்கும் இந்த சக்திதேவி தான் கோவில் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பெயரில் அழைக்கப்படுகிறாள். தென்னகத்தின் மிகப்பழமையான நகரமான காஞ்சியில் காமாட்சியாக வீற்றிருக்கிறாள். அவளை போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை நாம் துதித்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
அஷ்டலட்சுமி ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kamakshi stotram in Tamil. It is also called as Kamakshi slogam in Tamil or Kamakshi mantra in Tamil.

- Advertisement -