- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முழுவதும் தலைக்கு மேல் வேலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உழைப்பு உழைப்பு என்று நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதேசமயம் ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். தேவையில்லாத மருத்துவ செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். அனுபவ சாலிகளாக வலம் வரப்போகிறீர்கள். திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சுலபமாக தீர்த்து விடுவீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலிருந்து வந்து டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண்விரய செலவுகள் குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்ல காலம் பிறக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பாராத அளவுக்கு பெயர் புகழ் அந்தஸ்து உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கான தகுதி உயரக்கூடிய நாள் இன்று. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவழிபாடும் மனதிற்கு அமைதியை தரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் அதிகம் நடக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். எதிரி தொல்லை விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் வரும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் இதுநாள் வரை பிரச்சனையாக இருந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனம் தெளிவாக இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தேவையான முக்கியமான முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும். தேவையில்லாத டென்ஷன் குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பல நாள் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளுடைய எதிர்கால நன்மைகளுக்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சில பேருக்கு தங்கம் வாங்கும் யோகம் உண்டு. வீட்டிலிருந்து வந்த சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட இந்த நாள் நல்ல நாளாக அமையும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உங்களால் இயன்ற அளவுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் நன்மைகளை பெறலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். மன சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகளோடு சண்டை சச்சரவுகள் வரலாம். பொறுமையாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். பண பிரச்சனைகள் சரியாகும். நிதிநிலைமை சீராகும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் உள்ளது. ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப உறவுகள் உங்களுக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருப்பார்கள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -