- Advertisement -

திருஷ்டி நீங்க கண் திருஷ்டி பிள்ளையார் வழிபாடு

- Advertisement -

இன்று குடும்பத்தில் பெரிய பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் கண் திருஷ்டி. கல்லடி பட்டாலும் படலாம் கண் திருஷ்டி படக்கூடாது என்று சொல்லுவார்கள். என்ன தான் நம்முடைய வருமானத்தையும் நம் குடும்ப சந்தோஷத்தையும் நாம் வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலும், நம்முடைய வீட்டிற்குள் வருபவர்களுடைய கண்பார்வை, நம்முடைய குடும்பத்திற்கு சில பிரச்சனைகளை கொடுத்து விடும்.

நாமும் புத்திசாலித்தனமாக நிலை வாசலுக்கு வெளியில் கண் திருஷ்டி பிள்ளையாரை வைத்திருப்போம். இந்த கண் திருஷ்டி பிள்ளையாரை நிலை வாசலில் வைத்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி படாதா. கண்திருஷ்டி பிள்ளையாரை வீட்டில் சரியாக எந்த இடத்தில் வைத்தால் கண் திருஷ்டியை முழுமையாக தவிர்க்க முடியும். இந்த கேள்விகளுக்கெல்லாம் உண்டான விடையைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கண் திருஷ்டி பிள்ளையார் பரிகாரம்

வீட்டின் நிலை வாசலுக்கு வெளியில் கண் திருஷ்டி பிள்ளையாரை வைக்கலாம் தவறு கிடையாது. ஆனால் வீட்டிற்கு வெளியில் செல்பவர்களால் நம்முடைய குடும்பத்திற்கும், நம் வீட்டிற்கும் கண் திருஷ்டி வருமா என்று கேட்டால், அது நிச்சயம் கிடையாது. நம்முடைய வீட்டிற்குள் வருபவர்கள், நம்முடைய வரவேற்பறை வரை வந்து நம் வீட்டை பார்க்கக் கூடியவர்களுடைய கண்களில் இருந்து மட்டும் தான் கண் திருஷ்டி வெளிப்படும்.

அந்த கண் பார்வை மூலம் தான் நம்முடைய குடும்பத்தில் பிரச்சனைகள் வரும். இதனால் உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு கண் திருஷ்டி பிள்ளையாரை வையுங்கள். கண் திருஷ்டி பிள்ளையாரின் கண்கள் வீட்டிற்கு வருபவர்கள் மேலே விழ வேண்டும். வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் இந்த கண் திருஷ்டி பிள்ளையாரை பார்க்கும்படி, அந்த பிள்ளையாரை உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மாட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

பெரும்பாலும் கண் திருஷ்டி பிள்ளையாருக்கு வீட்டில் இருப்பவர்கள் எந்த வழிபாடும் செய்ய மாட்டார்கள். ஆனால் அது தவறு. செவ்வாய்க்கிழமை தோறும் கண் திருஷ்டி பிள்ளையாருக்கு ஒரு சந்தனம் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, சிவப்பு நிற பூக்களை போட்டு இரண்டு செவ்வாழைப்பழமும், ஒரு டம்ளர் நீர்மோர் பானகமும் வைத்து ஒரு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்து, இந்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து உண்ண வேண்டும்.

கண் திருஷ்டி பிள்ளையாரை செவ்வாய்க்கிழமை தோறும் இந்த முறையில் வழிபாடு செய்து வருவதன் மூலம் அந்த பிள்ளையாரின் உக்கிர தன்மையானது குறையும். கண் திருஷ்டி பிள்ளையார் என்றால் போருக்கு செல்வது போல கொஞ்சம் உக்கிரமாக தான் இருப்பார். அவருடைய உக்கிர தன்மை குறைந்து நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலையையும் அவர் சரியாக செய்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக அஜா ஏகாதசி வழிபாடு

இதற்காகத்தான் ஆன்மீகத்தில் இந்த எளிமையான வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் நிலை வாசலில் கண் திருஷ்டி பிள்ளையார் இருந்தாலும் பரவாயில்லை. அழகாக ஒரு சின்ன கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வரவேற்புரையிலும் மாட்டி வையுங்கள். செவ்வாய்க்கிழமை மறக்காமல் மேல் சொன்ன வழிபாட்டையும் அந்த கண் திருஷ்டி பிள்ளையாருக்கு செய்து பாருங்கள் உங்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டியால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் வராது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -