- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் பெருக அஜா ஏகாதசி வழிபாடு

செல்வம் பெருக அஜா ஏகாதசி வழிபாடு

- Advertisement -

மாதம்தோறும் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று, விஷ்ணு பகவானுக்கு உரிய இரண்டு திதிகள் வரும். இந்த ஆவணி மாதம் வந்திருக்கக்கூடிய தேய்பிறை ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி அன்று பெருமாலை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை நம்மால் பெற முடியும் என்பது நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் நம்பிக்கை.

இன்றைய தினம் 29-08-2024 வியாழக்கிழமையோடு சேர்ந்து இந்த அஜா ஏகாதசி திதி வந்திருக்கிறது. நம்முடைய செல்வ வளம் பெருக மிக மிக எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே பெருமாளை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஏகாதசி வழிபாட்டு முறை

ஏகாதசி என்றாலே எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வதுதான் சரியான முறை. உடல் ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் இதை பின்பற்ற முடியாது. பசி தாங்க முடியாதவர்களாலும் இதை பின்பற்ற முடியாது. பால் பழம் அல்லது பலகாரம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் எப்போதும் போல உங்களுடைய சைவ உணவை சாப்பிட்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இன்று மாலை 6:00 பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பெருமாளுக்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரம் ஒரு சின்ன துண்டு, இரண்டு ஏலக்காய் போட்டு வைக்கவும். பெருமாளுக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து விடுங்கள். பூஜை அறையின் முன்பாக அமர்ந்து பெருமாளுக்கு உரிய ஏதாவது ஒரு மந்திரத்தை மனதார சொல்லி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

கோவிந்தா கோவிந்தா என்று சொல்லலாம். ராமா ராமா என்று சொல்லலாம். பெருமாள் திருவடிகள் சரணம் என்று சொல்லலாம். ஓம் நமோ நாராயணா என்று சொல்லலாம். மந்திர உச்சாடனம் உங்களுடைய விருப்பம் தான். வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒலிக்க விடுங்கள். பிறகு பிரார்த்தனையை மனதார பெருமாளிடம் வைத்துவிட்டு செல்வ வளம் பெறுக வேண்டிக்கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து துளசி தீர்த்தத்தை பருகி உங்களுடைய இந்த நாள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

பெருமாள் பாதத்தில் வைத்த பச்சைக் கற்பூரத்தை எடுத்து பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். ஏலக்காய்களை எடுத்து பாலில் போட்டு காய்ச்சி நீங்கள் அந்த பாலை பருகலாம் ரொம்ப ரொம்ப நல்லது. பிறகு வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரையும் பெருமாளையும் வழிபாடு செய்து துளசி இலை மாலை வாங்கி கொடுக்கலாம். இப்படி இன்றைய தின வழிபாட்டை எளிமையாக செய்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: நிரந்தர பண வரவை தரும் பரிகாரம்

உங்களுக்கு பெருமாளின் அருள் கிடைக்கும் புண்ணியம் கிடைக்கும். அஸ்வமேத யாகம் நடத்திய பெரிய பலனும் கிடைக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். அதோடு மட்டுமல்லாமல் இன்றைய தினம் பெருமாள் வழிபாடு செய்பவர்களுக்கு வாழும்போது மட்டுமல்ல வாழ்ந்த பிறகும் கூட அந்த சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு வைகுண்டம் போய் சேர வேண்டும் என்றால் மாதம் தோறும் வரக்கூடிய ஏகாதசி விரத வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் பெருமாளின் பாதத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்