- Advertisement -
- Advertisement -

இந்த வருடம், நாளை (அக். 22, 2025) புதன் கிழமை, முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. தொடர்ந்து வரக்கூடிய ஆறு நாட்களும் முருகனின் திருவருளை முழுமையாகப் பெற நமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. கேட்ட வரம் தரும் எளிய அபிஷேக பிரியராக இருக்கக் கூடிய முருகனுக்கு இந்த நாளில் இந்த ஒரு விசேஷ பொருளை கொண்டு அபிஷேகம் செய்ய, கேட்ட வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். கந்த சஷ்டி விரதம் துவக்க நாளில், முருகனுக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

பொதுவாக கந்த சஷ்டி விரதம் துவங்கிய நாள் அன்று முருகனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் போன்ற பல பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இந்த கந்த சஷ்டி விரதம் துவங்கும் புனித நாளில், முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடுவது மிக விசேஷம் என்று ஆன்மிக பெரியோர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இளநீர் அபிஷேகத்தின் சிறப்பு:
இளநீர் அபிஷேகம் முருகனின் சினம் தணிந்து, சாந்தமான அருளைப் பொழியச் செய்யும். இளநீர் தூய்மையின் சின்னம். அதைக் கொண்டு அபிஷேகம் செய்யும் போது, நமது மனதின் மாசு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். இளநீர் அபிஷேகம் செய்து, மனமுருகி வேண்டினால், முருகப்பெருமான் நமது வேண்டுதல்களை அதாவது (திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி உட்பட) அனைத்தையும் நிறைவேற்றி, வாழ்வில் நிறைவை அருள்வார் என்பது நம்பிக்கை.

மிகுந்த வறுமையில் இருப்பவர்களையும், இளநீர் போன்ற இனிப்பான வசந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிகாட்டி கொடுப்பார். முருகனை நம்பியோருக்கு அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. இளநீரின் கடினமான ஓடு உள்ளே இருக்கும் அமிர்தத்தை காப்பது போல, முருகனும் நம்மை காக்கும் திடமான அரணாக இருந்து நன்மைகள் பல செய்வார்.

- Advertisement -

கந்த சஷ்டி விரதம் இருக்க எளிய வழிமுறை:
விரதத்தின் முதல் நாளான நாளை, அதிகாலையில் எழுந்து நீராடி, உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகனுக்குரிய இடத்தை சுத்தம் செய்யுங்கள். முருகன் படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ பூக்கள் சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பின்னர், ஒரு புதிய இளநீரை எடுத்து, உங்கள் கைகளால் முருகனின் திருவுருவத்திற்கோ அல்லது வேலுக்கோ மெல்ல மெல்ல அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் செய்யும் போது, ‘ஓம் சரவண பவ’ அல்லது ‘ஓம் முருகா’ என்று மனதார ஜபிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
கந்த சஷ்டி முதல் நாள் வழிபாடு

அபிஷேகம் முடிந்தபின், தூப தீபங்கள் காட்டி, கந்த சஷ்டி கவசம் அல்லது உங்களுக்குத் தெரிந்த முருகனின் துதிகளைப் பாடி, எளிய நைவேத்தியம் (சர்க்கரைப் பொங்கல், பழங்கள், பால்) படைத்து முருகனை வணங்குங்கள். வெளிப்படையான ஆடம்பரங்களை விட, நாம் முழு மனதுடன், பக்தியுடன் செய்யும் எளிய வழிபாடே முருகனுக்குப் பிரியமானது. இந்த ஆறு நாட்களும் விரத நியமங்களைக் கடைப்பிடித்து, முடிந்த அளவு முருகனின் நாமங்களை ஜபித்து, கந்தனை மனதில் நிலை நிறுத்தி வாருங்கள். நம்பிக்கையோடு இளநீர் அபிஷேகம் செய்து, முருகனின் பரிபூரண அருளைப் பெற்று, கேட்ட வரம் அனைத்தையும் அடையுங்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

- Advertisement -