
இன்றைய சூழ்நிலையில் மனிதனுக்கு கண்ணுக்குத் தெரிந்த எதிரியை விட, கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கண் திருஷ்டியின் மீதும், எதிர்மறை ஆற்றலின் மீதும் தான் அதிக பயம் இருக்கிறது. அழகாக ஆடை உடுத்திக் கொண்டு சென்றால், அடுத்த நொடியே கண் திருஷ்டி விழுகிறது. குடும்பத்தோடு ஒரு வாடகை காரில் போய் இறங்கினாலும், அடுத்தவர்களுடைய பார்வை நம் குடும்பத்தின் சந்தோஷத்தை எரித்து விடுகிறது.
சந்தோஷமாக வீட்டிற்கு தேவையான ஒரு புது பொருள் வாங்கினால் கூட போதும். அடுத்தவர்களுக்கு பொறுக்கவில்லை. நம் மீது பொறாமைப்படுபவர்கள், கண் திருஷ்டி வைப்பவர்கள், எல்லாம் மூன்றாவது மனிதர்களா, கட்டாயம் கிடையாது. நம்முடைய சொந்த பந்தங்களும், நம்முடைய நண்பர்களும் தான், நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து வயிற்றெரிச்சல் படுபவர்களாக இருக்கிறார்கள்.
அதற்காக எல்லோரையும் பொதுப்படையாக குறை சொல்லி விட முடியாது. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சில நண்பர்களும், சில உறவுகளும் இருப்பதன் மூலமாக தான் இன்றும் பூமியில் மழை பெய்து, நம்மால் வாழ முடிகிறது. சரி, போகட்டும் உங்களுக்கும் இதுபோல கண் திருஷ்டி தொல்லைகளும், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலினால் தொல்லைகளும் இருக்கிறதா.
இதிலிருந்து சுலபமாக வெளிவர வேண்டும் என்றால், என்ன செய்வது. முருகப்பெருமானை நினைத்து ஒரு துளி விபூதியை நெற்றியில் இப்படி வையுங்கள் போதும். கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டியோ, எதிர்மறையாற்றலோ உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எதுவும் செய்ய முடியாது.
இந்த விபூதியை தயார் செய்ய முதலில் பசுஞ்சாண விபூதி உங்களுக்கு தேவை. சுத்தமான விபூதி வாங்கிக் கொள்ளுங்கள். அதில் எந்த கலப்படமும் இருக்கக் கூடாது. கொஞ்சம் பணம் செலவானாலும் ஆர்கானிக் விபூதியை தேர்ந்தெடுத்து, வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன பாக்கெட் அளவு வாங்கினால் போதும். அந்த விபூதியை ஒரு தாம்பூல தட்டில் பரப்பி கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். அந்த விபூதிக்கு மேலே ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதுங்கள்.
அதன் மேலே உங்களுடைய உள்ளங்கைகளை வைத்து ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். உங்களுக்கு வேறு ஏதாவது இஷ்ட தெய்வம் ரொம்ப பிடிக்குமா மாரியம்மன் மந்திரம் சொல்லலாம். ‘ஓம் சக்தி பராசக்தி’ செல்லலாம். ‘ஓம் நமசிவாய’ சொல்லலாம். எந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை 108 முறை சொல்லி அந்த விபூதியை சக்தி ஏற்றி ஒரு டப்பாவில் போட்டு பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.
அழகாக அலங்காரம் செய்து வெளியிடங்களுக்கு செல்லும்போது இந்த விபூதியை ஒரு துளி நெற்றியில் வைத்து சென்றால் கண் திருஷ்டி உங்கள் மீது விழாது. தினம்தோறும் இந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டால் கண்ணுக்குத் தெரியாத எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் உங்களை தாக்காது. அடுத்தவர்களுடைய கெட்ட எண்ணத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
அப்படியும் முடியவில்லை உடம்பு முழுவதும் அடித்துப் போட்டது போல சோம்பேறித்தனம் இருக்கிறது, உடல் சோர்வு இருக்கிறது, கண் திருஷ்டி பட்டால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லுவார்கள். இதிலிருந்து விடுபட என்ன செய்வது. நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சமாக தயார் செய்து வைத்திருக்கும் விபூதியை போட்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லி குளித்து விடுங்கள்.
உடம்பை பிடித்த அத்தனை கெட்டதும் விலகிவிடும். தேவைப்பட்டால் இந்த விபூதியை கொஞ்சம் தண்ணீரில் கடந்து வீட்டின் மூளை முடுக்குகளின் தெளித்து விட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் விலகப்படும். இவ்வளவு எளிதான பரிகாரத்தில் இவ்வளவு பெரிய நன்மை நடக்குமா? என்ற சந்தேகம் ஒரு துளி கூட வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: அறிவாற்றல் சிறந்து விளங்க படிக்க வேண்டிய திருப்புகழ்
உண்மையான நம்பிக்கையோடு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை 108 முறை சொல்லி அழைத்தால் நிச்சயம் அந்த தெய்வம் வந்து உங்களை காக்கும். இதுதான் நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.