மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஞானம் இருக்கிறது. திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது. ஆனால் எந்த நேரத்தில், என்ன செய்வது என்பதில் தான் தெளிவு கிடையாது. படிக்க வேண்டிய வயதில் படிப்பதில்லை, வேலை செய்ய வேண்டிய வயதில் வேலை செய்வது இல்லை, சரியான பொறுப்பு கைக்கு வரும் நேரத்தில் அதற்கான நேரத்தை ஒதுக்குவதில்லை.
கிடைக்கும் நேரத்தை எல்லாம் வீணடித்து விட்டு பிறகு கஷ்டப்படுவது. பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் அமர வேண்டும், வேலையில் இருப்பவர்கள், அவர்களுடைய திறமையை தங்களுடைய வேலையில் முழுமையாக காட்ட வேண்டும். தனக்கு கொடுத்த பொறுப்பை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும், இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள், பலதரப்பட்ட மனிதர்களுக்கு இருக்கிறது.
நீங்கள் மாணவர்களாக இருந்தாலும், வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும், தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய வேலையில் நீங்கள் நேரத்தை வீணடிக்காமல் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்றால் என்ன திருப்புகழ் பாராயணம் செய்வது.
அறிவில் சிறக்க திருப்புகழ்
மதியால் வித்தகனாகி
மனதால் உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான
பரயோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே யென் நினைவே
நற் பொருளாயோய்
கதியே சொற் பரவேளே
கருவூரிற் பெருமாளே.
பிரச்சனை வரும்போது மட்டும் முருகனின் முன்பு போய் நின்று கொண்டு இந்த திருப்புகழை பாடக்கூடாது. நீங்கள் படிக்கும் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் முருகன் திருவுருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து இந்த பாடலை குறைந்த பட்சம் 3 முறை பாட வேண்டும். இந்தப் பாடலைப் படிப்பவர்களுக்கு ஞானம் பிறக்கும். அறிவாற்றல் சிறக்கும்.
சில பேருக்கெல்லாம் வேலையில் இக்கட்டான சூழ்நிலை வந்துவிடும். குறிப்பிட்ட இந்த நாளுக்குள் இந்த வேலையை முடித்து தரவில்லை என்றால் வேலைக்கு பிரச்சனை, மேலதிகாரிகளோடு பயங்கர பிரஷர் இருக்கும், அந்த சமயத்தில் எல்லாம் இந்த திருப்புகழை படித்துவிட்டு உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளும் போது நிச்சயம் 100% சக்சஸ் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: கார்த்திகை சோமவார வழிபாடு 2024
மாணவர்கள் கட்டாயம் இந்த பாடலை தினமும் படிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க, உங்களுடைய முயற்சி ஒரு புறம் இருக்க, இந்த பாடல் ஒரு புறம் சேர உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.