- Advertisement -
- Advertisement -

நாளைய தினம் விநாயக சதுர்த்தி. ஒவ்வொரு வீட்டிலும் விநாயகர் வழிபாடு மிகவும் விமர்சையாக நடக்கும். விநாயகருக்கு பிடித்த பிரசாதங்களை செய்து வைப்போம். கடையிலிருந்து வாங்கியும் வைப்போம். விநாயகருக்கு அலங்காரம் செய்வோம். வீடு கோலாகலமாக இருக்கும். இந்த தினத்தில் விநாயகருக்கு எந்த பிரசாதத்தை நாம் கட்டாயமாக வைக்கக் கூடாது, விநாயகருக்கு படிக்க வேண்டிய காரிய சித்தி மாலையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில பாடல் வரிகளை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

விநாயகருக்கு நாளைய தினம் எல்லா வகையான இனிப்பு பிரசாதங்களையும் செய்து வைக்கலாம். கடையிலிருந்து வாங்கி வைக்கலாம் தவறு கிடையாது. ஆனால் காரம் சேர்த்த பிரசாதங்களை விநாயகருக்கு நாளைய தினம் நெய்வேத்தியமாக வைக்கக் கூடாது. சுண்டல் செய்தாலும் கடுகு கருவேப்பிலை தாளித்து வையுங்கள். மிளகாய் போட்டு தாளிக்க வேண்டாம்.

- Advertisement -

முறுக்கு சீடை செய்தாலும் உப்பு போட்ட பலகாரங்கள் மட்டுமே வைக்க வேண்டும். அதில் பச்சை மிளகாயோ, மிளகாய் தூள் சேர்த்து சமைத்தோ விநாயகருக்கு படைக்க வேண்டாம். இது முதல் விஷயம். அதேபோல நாளைய தினம் யானைக்கு உணவாக வாங்கிக் கொடுக்கக்கூடிய எல்லா பொருட்களையும் விநாயகருக்கு பிரசாதமாக வைத்து வழிபடலாம். உதாரணத்திற்கு கரும்பு, அன்னாசி பழம், வாழைப்பழங்கள் இதெல்லாம் யானைக்கு ரொம்பவும் விருப்பமான பொருட்கள்.

சோளக் குருத்து இதையெல்லாம் நாளைய தினம் விநாயகருக்கு வைத்து வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு வெள்ளை பட்டு வஸ்திரம் அல்லது சிவப்பு பட்டு வஸ்திரம் சாத்துவது சிறப்பு. நாளைய தினம் விநாயகரை வழிபாடு செய்து விட்டு படிக்க வேண்டிய காரிய சித்தி மாலை பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

காரிய சித்தி மாலை பாடல் வரிகள்

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

நெருப்பில் போட்ட பஞ்சு போல என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீயில் பொசுங்கி, மீண்டும் இந்த பூமியில் பிறவா வரம் வேண்டும், நம்முடைய பாவங்கள் எல்லாம் தொலைய வேண்டும் என்று தும்பிக்கை நாயகனை வழிபாடு செய்கின்றோம். இந்த பிரார்த்தனை நிறைவேற விநாயகரின் பாதங்களைச் சரணடைகின்றேன் என்று வேண்டுதலை வைக்கின்றோம்.

இதையும் படிக்கலாமே: விநாயகர் சதுர்த்தி 2024

இதுதான் இந்த பாடலின் அர்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய துன்பங்களாக இருந்தாலும் சரி அதை விநாயகரின் பாதத்தில் இறக்கி வைத்து விடுங்கள். சந்தோஷமாக இந்த விநாயகர் சதுர்த்தி நாளை வழிபாடு செய்யுங்கள். விநாயகரின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by