மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலமாகத்தான் லட்சுமி கடாட்சம் வீட்டில் உயரும் என்று சொல்லுவார்கள். ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை ஆரவாரத்துடன் வழிபாடு செய்தாலும் நம்முடைய செல்வ வளம் உயரும். கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் விநாயக சதுர்த்தி. எல்லோர் வீட்டிலும் கட்டாயம் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்குவோம்.
அந்தப் பிள்ளையாரை வாங்கும் போது நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் பின்பற்றி பாருங்கள். அப்பவே உங்களுடைய கர்ம வினை தீர்த்து, உங்களுடைய கடன் சுமை குறைவதற்கு உண்டான நல்ல நேரம் ஆரம்பித்து விடும்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு 2024
நாளைய தினம் ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து விநாயகர் சிலை வாங்க வீட்டில் இருக்கும் ஆணோ, பெண்ணோ கடைக்கு செல்வீர்கள். செல்லும் போது ஒரு மனப்பலகை அல்லது ஒரு பித்தளை தாம்பூல தட்டை எடுத்துக்கொண்டு, கடைக்கு செல்ல வேண்டும். பிள்ளையார் வாங்கும்போது பேரம் பேச வேண்டாம். ஒரு சின்ன தட்டில் வெற்றிலை, பாக்கு, பூ பழம் ஏதாவது ஒரு இனிப்பு வகை வைத்து 11 ரூபாய் தட்சணை வைத்து கடைக்காரருக்கு மரியாதை செலுத்தி, பிறகு பிள்ளையாரை வாங்கி ஆசனத்தில் அமர வைத்துக் கொள்ளுங்கள்.
பிள்ளையாருக்கு உண்டான மதிப்பை தனியாக கொடுத்து விடலாம். இந்த தாம்பூலத்தில் நீங்கள் கடைக்காரருக்கு மரியாதை செலுத்துகிறீர்கள். இது சிலை செய்தவருக்கு உண்டான மரியாதை. வாங்கிய பிள்ளையாரை தாம்பூல தட்டிலோ அல்லது மனப்பக பலகையிலோ வைத்து அந்த பிள்ளையாரை உங்கள் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.
கடைக்காரருக்கு தாம்பலத்தோடு இனிப்பு பதார்த்தங்களை தானமாக கொடுத்த அந்த சமயத்திலேயே, உங்களுடைய கர்மா கரையும். உங்களுடைய கடன் கரையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல வாங்கி வந்த பிள்ளையாரை வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்.
ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நடந்தது. ஆவணி மாதம் பிள்ளையார் பிறந்திருக்கிறார். புதுசாக ஒரு குழந்தை நம் வீட்டில் பிறந்தால், நம்முடைய வீட்டில் எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு மனநிறைவு இருக்குமோ, அதேபோல பிள்ளையாரை ஆரத்தி எடுத்து நம் வீட்டிற்குள் வர வைத்து, பூஜை அறையில் அமர வைத்து, அவருக்கு உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அணிவித்து, அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகருக்கு நிறைய இனிப்பு பலகாரங்கள் வைத்து, இளநீர் வைத்து, தர்பூசணி வைத்து, வழிபாடு செய்வது சிறப்பு. அதேபோல நாளைய தினம் விநாயகருக்கு எருக்கன் மாலை, அருகம்புல் சாத்துவீர்கள். இதன் கூடவே விளம்பழம் என்ற ஒரு பழம் விற்கும். அந்த விளாம்பழத்தை விநாயகர் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அதி அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு இந்த விளாம்பழம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
விநாயகரை அமர வைக்கும் மனப்பலகைலோ அல்லது தாம்பல தட்டிலோ அரிசி மாவில் ‘க்லீம்’ என்னும் வார்த்தையை எழுத வேண்டும். விநாயகருக்கு உரிய பீஜ மந்திரம் இது. இந்த வார்த்தையை எழுதி அதன் மேலே விநாயகரை அமர வைத்து வழிபாடு செய்யும்போது நம்முடைய செல்வ வளம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. (விநாயகர் சதுர்த்தி அன்று வாங்கி வந்த களிமண் பிள்ளையாரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்து விட்டு, அந்த களிமண்ணின் ஈரம் மொத்தமாக வறட்சி அடைவதற்குள் கொண்டு போய் ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).
உங்களுடைய வாழ்க்கையில் தீராத கஷ்டங்கள் துன்பங்கள் தடைகள் இருக்கிறது என்றால் உங்களுக்கு எத்தனை வயது, அத்தனை தேங்காய் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய தேங்காயை விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடைத்த சிதற தேங்காயை மற்றவர்கள் எடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே: ஜென்ம தரித்திரம் நீங்க வழிபாடு
நீங்களே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன இந்த எளிமையான முறைகளை பின்பற்றி விநாயகரை வழிபாடு செய்தாலே போதும் அடுத்த வருடத்திற்குள் உங்களுக்கு ஒரு ரூபாய் கடன் கூட மிஞ்சாது. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.