- Advertisement -

காரிய வெற்றியைத் தரும் வெற்றி திலகம்

- Advertisement -

ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது அந்த நாளில் சில காரியங்களை செய்ய வேண்டும் என்று நாம் நினைப்போம். அப்படி நினைக்கக்கூடிய காரியங்கள் பல வகைகளாக இருக்கும். அந்த காரியங்களால் நம்முடைய வாழ்க்கையை மாறும் சூழ்நிலை கூட உண்டாகும். அப்படிப்பட்ட காரியங்களில் வெற்றிகள் ஏற்பட்டு விட்டால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதுவே தோல்வியை சந்தித்து விட்டால் அதனால் நம் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் .இப்படி முக்கியமான ஒரு காரியத்தை செய்யும் பொழுது அந்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த திலகத்தை நெற்றியில் வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரிய வெற்றியைத் தரும் வெற்றி திலகம்

காலையில் வெளியே கிளம்புவதற்கு முன் வீட்டு பூஜை அறையில் தெய்வத்தை வழிபாடு செய்து விட்டு தெய்வத்தின் பிரசாதமாக திருநீறு, குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் என்று ஏதாவது ஒன்றை நம்முடைய நெற்றியில் வைத்திருப்போம். அவ்வையார் நீர் அணியாத நெற்றி வெறு நெற்றி என்று கூறி இருக்கிறார். இந்த பிரசாதங்களை நம்முடைய நெற்றியில் வைப்பதன் மூலம் நமக்கு தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் எந்த விதத் தீயசக்திகளும் நம்மை அணுகாது என்றும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் காரியவெற்றியை தரக்கூடிய திலகத்தை எப்படி தயார் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒரு காரியம் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக நாம் யாரிடம் ஆவது செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அவர்கள் நாம் சொல்லக்கூடிய விஷயங்களை கேட்டு அதை புரிந்து நமக்கு சாதகமாக செய்தால் தான் அந்த காரியத்தில் நமக்கு வெற்றிகள் உண்டாகும். அப்படி அவர்கள் செய்யாவிட்டால் அந்த காரியத்தில் தோல்வியை தழுவ நேரிடும். அந்த மாதிரி சமயத்தில் நாம் ஒரு திலகத்தை நம் நெற்றியில் வைத்துக்கொண்டு சென்றோம் என்றால் அந்த காரியத்தை செய்யக்கூடிய நபர் அதை எந்தவித தடையும் இல்லாமல் செய்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த திலகத்தை தயார் செய்வதற்கு மூன்றே மூன்று பொருட்கள் வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு சொட்டு அத்தரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிட்டிகை ஜவ்வாது பொடியையும் சிறிதளவு கோரோசனையும் சேர்த்து நன்றாக கலந்து நம்முடைய நெற்றியின் நடுப்பகுதியில் அதாவது இரு புருவங்களுக்கு இடையே வைக்க வேண்டும். அப்படி இந்த வகையில் திலகம் வைக்க விருப்பமில்லை என்று நினைப்பவர்கள் இந்த திலகத்தை லேசாக எடுத்து நம்முடைய உச்சந்தலில் கூட தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்படி இந்த திலகத்தை வைத்துக்கொண்டு செல்வதன் மூலம் ஜனவசியம், பணவசியம், காரிய சித்தி போன்ற அனைத்துமே நமக்கு சாதகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஐப்பசி முதல் செவ்வாய் குலதெய்வ வழிபாடு

இந்த தாந்திர பரிகாரத்தில் விருப்பம் இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக்கொண்டு செல்ல அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -