ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் என்பது இருக்கும். அந்த குலதெய்வத்தை தெரிந்து வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து விதமான வழிமுறைகளையும் பின்பற்றி குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி மேற்கொண்டால்தான் நம் குடும்பத்தில் அனைத்து விதமான சுப காரியங்களும் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்ந்து நன்மைகள் உண்டாவதற்கு குலதெய்வ அருள் என்பது பரிபூரணமாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஐப்பசி முதல் செவ்வாய் வழிபாடு
குலதெய்வ வழிபாட்டால் பல நன்மைகள் உண்டாகும். குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைப்பதற்கு ஒரு பரிகாரம், குலதெய்வத்தை வீட்டில் நிலையாக நிலை நிறுத்துவதற்கு என்று ஒரு பரிகாரம், குலதெய்வத்தை வசியம் செய்ய ஒரு பரிகாரம் என்று குலதெய்வம் நம்முடனே இருந்து நமக்கு நன்மைகளை தர வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை நாம் மேற்கொள்வதுண்டு. இன்னும் சிலரோ வருடத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ தங்களால் எப்பொழுதெல்லாம் இயலுமோ அப்பொழுதெல்லாம் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள்.
குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் தான் மற்ற தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்கும் என்ற கூற்றும் இருக்கிறது. மேலும் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்றும், எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அவை அனைத்தும் தூள் தூளாகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை ஐப்பசி முதல் செவ்வாய் அன்று வழிபாடு செய்யும் முறை.
ஐப்பசி மாதம் என்பது மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பூஜைக்கும், வழிபாட்டிற்கும் பல மடங்கு பலன் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என்பது இன்னும் அதிக பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை என்பது அக்டோபர் 22ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த வருடம் முழுவதும் நாம் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு குலதெய்வத்தின் அருளைப் பெற முடியும்.
தெய்வங்களில் பெருந்தெய்வம் சிறு தெய்வம் என்று இரண்டு தெய்வங்கள் இருக்கின்றன. பெருந்தெய்வம் என்று பார்க்கும் பொழுது பெரிய பெரிய ஆலயங்களில் இருக்கக்கூடிய தெய்வத்தை குலதெய்வமாக வைத்திருப்பார்கள். அந்த தெய்வத்தை தான் பெருந்தெய்வம் என்று கூறுவோம். அப்படிப்பட்டவர்கள் அன்றைய தினத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு தங்களால் இயன்ற அளவிற்கு அபிஷேகத்திற்கு வாங்கி தர வேண்டும். அதே போல் அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தங்களால் இயன்ற பொருட்களை தர வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி ஆலயத்திற்கு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்திற்கென்று சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்து அந்த பொங்கலை அருகில் இருப்பவர்களுக்கு கொடுப்பதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.
சிறு தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு படையல் போட்டு வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தால் அந்த வழக்கத்தை பின்பற்றி செவ்வாய்க்கிழமை அன்று குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். ஒரு சில தங்களுடைய வீட்டிலேயே இப்படி குலதெய்வத்திற்கு என்று படையல் போட்டு வழிபாடு செய்வார்கள் அப்படி செய்வதாலும் நல்ல பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த முறையில் ஐப்பசி மாதத்தில் நாம் நம்முடைய குல தெய்வத்தை வழக்கம் போல் வழிபாடு செய்தோம் என்றாலேயே அளப்பறியாத நன்மைகள் உண்டாகும் என்றும் அந்த வருடம் முழுவதும் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம் வீட்டில் குலதெய்வத்தின் பரிபூரண ஆசி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தேய்பிறை சஷ்டி நெய்வேத்தியம்
எப்பொழுதும் செய்யக்கூடிய அதே வழிபாட்டை செவ்வாய்க்கிழமை ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும் என்னும் பட்சத்தில் அந்த வழிபாட்டை ஒரு செய்துதான் பார்ப்போமே முழு நம்பிக்கையுடன் செய்து நம் வாழ்க்கையை மாற்றுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.