
வாழ்க்கையில் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை கஷ்டங்களுமே கர்ம வினையால் உண்டாக்கப்படக்கூடியது தான். நாம் செய்த பாவங்கள், அடுத்தவர்களுக்கு செய்த தீமைகள் எல்லாம் நம்மை மீண்டும் தாக்குகிறது. வாழ்க்கை என்பது ஒரு ரப்பர் பந்து போல, நீங்கள் எதை எரிகிறீர்களோ, அது திரும்பவும் உங்கள் கைக்கு அப்படியே வந்து சேரும். உங்களுடைய கர்ம வினை உங்களை நன்றாக வாழ வைக்கவில்லையா. இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்காக மட்டுமே.
கர்ம வினை கழிய வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முதல் பரிகாரம் அன்னதானம். உண்மையிலேயே சாப்பாட்டிற்காக கஷ்டப்படுபவர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் அன்னதானம் செய்து விடுங்கள். நிச்சயம் உங்களுடைய கர்ம வினையானது அந்த நொடிப் பொழுதே கழியும். உதாரணத்திற்கு ஆதரவற்ற இல்லங்களில் எவ்வளவோ குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தினமும் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும் சூழ்நிலை நமக்கு இல்லை.
ஆனால் வருடத்தில் 1 நாள் பிறந்தநாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் இப்படிப்பட்ட கொண்டாட்டங்களை நம் வீட்டில் செய்கின்றோம். அந்த ஒரு நாள் அவர்களுக்கு உதவி செய்தாலே போதும். இப்படி ஒவ்வொரு நாளும் பூமியில் இருக்கும் யாரோ ஒருவர் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றோம், ஒவ்வொரு நாள், ஒருவர் கொண்டு போய் அவர்களுக்கு உதவியை செய்யும் போது, அவர்கள் ஆதரவாற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.
தாய் தந்தை இல்லாதவர்களுக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அது சரியான விதத்தில் கிடைக்கும். இன்றும் நிறைய ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆள் இல்லாமல் எத்தனையோ ஆசிரமங்கள் உதவி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வருடத்தில் ஒரு முறை அந்த ஆசிரமத்திற்கு உதவி செய்யுங்கள் இது முதல் பரிகாரம்.
இதோடு சேர்த்து இன்னொரு பரிகாரத்தையும் நாம் பார்க்க போகின்றோம். காலண்டரில் கரிநாள் என்று ஒன்று வரும். அதைக் கெட்ட நாள் என்று சொல்லி நாம் ஒதுக்கி வைத்து விடுவோம். அந்த நாளில் பெரும்பாலும் நல்ல விஷயங்களை துவங்க மாட்டோம். ஆனால் இந்த கரிநாள் அன்று நாம் செய்யக்கூடிய அன்னதானம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கெட்ட கர்மாவை சீக்கிரம் குறைக்கும். கரிநாள் அன்று ‘கருவேப்பிலை சாதம்’ செய்து மூன்று பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
பசியோடு வாடி தவிக்கும் மூன்று பேர் கோவில் வாசலில் பிச்சை கேட்க அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த கருவேப்பிலை சாதத்தை தானம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் பெரிய துன்பங்கள் உடனடியாக விளக்கும். புதினா சாதம் மல்லி சாதம் செய்யும் போது அதில் நான்கு கொத்து கருவாப்பிலையை போட்டு வறுத்து அரைத்து சாதம் செய்து விடுங்கள், அவ்வளவுதான் வேறு ஒன்றுமே கிடையாது. எளிமையான இந்த தானம் உங்களுடைய கஷ்டத்தை உடனடியாக குறைக்கும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதத்தில் ஒரு நாள் ஏகாதசி விரதம் இருந்தாலும் சரி, அல்லது பிரதோஷ விரதம் இருந்தாலும் சரி, அதாவது சாப்பிடாமல் தான் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஆனால், அந்த ஏகாதேசி திதி அன்றும், பிரதோஷ திதி அன்றும் நீங்கள் சிவபெருமானையும், பெருமாளையும் வழிபாடு செய்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: முருகனின் அருள் பெற மந்திரம்
அதாவது ஏகாதசி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யணும். சிவபெருமானுக்கு பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யணும். யாரேனும் ஒருவரை பின்பற்றி நாள் கூட போதும். இந்த இரண்டு வழிபாடுகளும் உங்களுடைய கர்ம வினைகளை குறைக்க கூடியதாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொன்ன இந்த விஷயங்களில் அத்தனையும் ஒரு மனிதன் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களால் முடிந்த ஒன்றை செய்யுங்கள். மனதார செய்யுங்கள். நம்பிக்கையோடு செய்யுங்கள், நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.