
ஐந்தாவது திதியாக வரக்கூடிய பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த கார்த்திகை மாதத்தில் தேய்பிறை பஞ்சமி என்பது நவம்பர் மாதம் 20ம் தேதி புதன்கிழமை வருகிறது. புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பஞ்சமி திதி அன்று நாம் வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி எந்த மந்திரத்தை கூறினால் வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை என்பது இருக்கவே இருக்காது என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த வாராகி அம்மனை பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது என்பது அதீத பலனை தரும். பலரும் தங்களுடைய இல்லத்தில் வாராகி அம்மனின் சிலையையோ படத்தையோ வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். எப்படி வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் இந்த முறையில் தீபம் ஏற்று இந்த மந்திரத்தை கூறினால் போதும்.
புதன்கிழமை இரவு 9:41 நிமிடம் வரை பஞ்சமி திதி என்பது இருக்கிறது. அதனால் புதன்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது மாலை 5 மணியிலிருந்து 9 மணிக்குள் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம். திருமணம் தடைப்பட்டு கொண்டிருக்கிறது, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடைப்பட்டு கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலையை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். பண வசியம் ஏற்பட வேண்டும் பணத்தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிராம்பு அல்லது ஏலக்காய் மாலையை வாராகி அம்மனுக்கு அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.
வீட்டில் இருக்கக்கூடிய வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் அன்றைய தினத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாராகி அம்மனின் சிலைக்கு அபிஷேகம் செய்து உளுந்து சம்பந்த ப்பட்ட ஏதாவது ஒரு உணவு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். தேங்காய் தீபம் ஏற்றும் பழக்கம் இருப்பவர்கள் புதன்கிழமையோடு சேர்ந்து பஞ்சமி திதி வருகிறது என்பதால் ஒரு தட்டில் பச்சைப் பயிரை பரப்பி அதற்கு மேல் தேங்காயை வைத்து தேங்காய் தீபம் ஏற்றுவது என்பது புதன் பகவானின் அருளையும் அதேசமயம் வாராகி அம்மனின் அருளையும் பெறச் செய்யும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனின் இந்த மந்திரத்தை 33 முறை உச்சரிக்க வேண்டும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ நித்ய சௌபாக்கிய சௌந்தர்யை நமோ நம ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ நித்ய நிர்மலாயை நமோ நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் நமோ நித்திய வைபவ வாராகியை நமோ நம
இதையும் படிக்கலாமே:நகை அடகு போகாமலிருக்க வராகி வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனை பஞ்சமி திதி அன்று இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.