- Advertisement -

கார்த்திகை மூன்றாவது சோமவார வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் 2-12-2024 கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரம். கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் மூன்றாவது திங்கட்கிழமை. எல்லா விஷயத்திலும் மூன்று என்ற எண்ணுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இறைவனால் ஆசிர்வாதிக்கப்பட்ட எண் இந்த மூன்று என்று கூட சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் நாளைய தினம் மூன்றாம் பிறை தரிசனம் செய்யக்கூடிய ஒரு அற்புதம் ஆன நாள்.

மூன்றாம் பிறை நிலவை சிவபெருமான் தன் தலையிலேயே சூடிக் கொண்டிருக்கின்றனர். மூன்றாம் பிறை தரிசனமானது, கார்த்திகை சோமவார நாளில் வருவது மிக மிக சிறப்பு. நாளை சங்காபிஷேகம் பார்த்துவிட்டு, மாலை மூன்றாம் பிறை தரிசனத்தை செய்து, ஈசனை மனதார நினைத்து எவர் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் அந்த ஈசனை தரிசனம் செய்ததற்கு சமம்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் வேலையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், மேலும் மேலும் பதவி உயர்வு கிடைத்து, வாங்கும் சம்பளம் மேலும் உயர வேண்டும் என்றால், நாளைய தினம் சிவனுக்கு நடக்கும் சங்காபிஷேகத்தில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். சங்காபிஷேகத்தை கண் குளிர பாருங்கள். உங்களால் முடிந்த அபிஷேகப் பொருட்கள் ஈசனுக்கு வாங்கிக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையும் வளர்பிறை நிலவு போல முன்னேற்றத்தை பெறும்.

உங்கள் வீட்டு அருகில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் சங்காபிஷேகம் செய்யவில்லை. பொருளாதார சூழ்நிலை காரணமாக சங்காபிஷேகத்திற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றால், நீங்கள் முன் நின்று 4 பேரை சேர்த்து, அந்த ஈசனுக்கு அபிஷேகம் செய்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டால், அந்த முயற்சி உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுத்து விடும்.

- Advertisement -

இன்றளவும் நிறைய கோவில்கள் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல், பணம் இல்லாமல், விளக்கு ஏற்ற கூட வழி இல்லாமல் இருக்கிறது. அப்படி ஒரு சிவன் கோவிலில் நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தாலும் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக மாறிவிடும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள், தொழிலை பின்தங்கி இருப்பவர்கள், வேலையில் பின்தங்கி இருப்பவர்கள் எல்லாம் நாளை சிவபெருமானி தரிசனம் செய்து விடுங்கள். உங்கள் வாழ்க்கை வளர்பிறை நிலவு போல வளர்ந்து உயர்ந்த நிலைக்கு செல்லும். அந்த ஈசன் கோவிலில் அமர்ந்து மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்டதெல்லாம் கிடைக்கும்.

- Advertisement -

மழைக்காலம் மூன்றாம் பிறை நிலவு தெரிவது அவ்வளவு சுலபம் அல்ல. மூன்றாம் பிறை தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மேற்கு திசையில், மூன்றாம் பிறை நிலவு உதிக்கக்கூடிய சமயத்தில், நாளை மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் ஈசனை மனதார நினைத்து, சந்திரனை மனதார நினைத்து உங்களுடைய வேண்டுதலை வைத்தாலே போதும். அந்த வேண்டுதல் அந்த எம்பெருமானின் காதில் விழுந்து விடும்.

குறிப்பிட்ட இந்த பிரமோஷனுக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன், தொழிலில் இந்த காண்ட்ராக்ட் மட்டும் எனக்கு கிடைத்துவிட்டால் நான் வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன், என்ற சூழ்நிலை சில பேர் இருக்கும். அவர்கள் எல்லாம் நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்துவிட்டு விரதத்தை துவங்குங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும் எண்கள்

ஈசனை மனதார நினைத்து விரதம் மேற்கொண்டு மாலை ஈசன் கோவிலுக்கு சென்று ஈசனை தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்து கொண்டால், உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். நாளை சோமவார தினத்தை யாரும் தவற விடாதிங்க. வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பவர்கள் நாளைய தினம் ஈசனை கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -