மனிதர்களுடைய மனதிற்குள் ஒரு சில விஷயங்கள் எல்லாம் ஆழமாக பதிந்திருக்கும். போன வருடம் போட்ட சண்டை, போன மாதம் கணவர் திட்டிய வார்த்தை, மூன்று மாதங்களுக்கு முன்பு பிள்ளைகள் போட்ட சண்டை, உறவுகளால் ஏற்பட்ட வாக்குவாதம், இப்படி நடந்த சம்பவங்கள் எல்லாம் நம்முடைய நினைவுக்கு வருவது எப்போது? அப்படியே படுத்து தூங்கும் போது ஒவ்வொன்றாக நினைவுக்கு வரும்.
நம்மை அறியாமல் நாமே உணர்ச்சிவசப்பட்டுக் கொள்வோம். தூக்கத்தை இழந்து விடுவோம். இது ஒரு பக்கம் இருக்க, நம்மை அறியாமலேயே அடுத்தவர்களிடம் நாம் சண்டை போட்டு, தகாத வார்த்தைகளை பேசி, அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தி இருப்போம். இரண்டு மூன்று நாட்கள் கழித்து, யோசித்துப் பார்க்கும்போது நாம் செய்தது தவறு என்ற ஒரு குற்ற உணர்ச்சியோடு இருப்போம்.
நம்மால் அடுத்தவர்களுக்கு கஷ்டம் வந்து விட்டதே, என்ற ஒரு மன அழுத்தம் நம்மோடு இருக்கும். இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் ஒரு மனிதனுக்கு இருக்கும். எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் பகலில் வேலை செய்யும்போது அதெல்லாம் நம் நினைவுக்கு வராது. சரியாக தூங்க போகும் நேரத்தில் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஞாபகம் வந்து நம்மை கஷ்டப்படுத்திவிடும்.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும், தேவையற்ற மன அழுத்தம் குறைய வேண்டும், நம்மிடம் இருக்கும் தேவையற்ற ஞாபகங்கள் எல்லாம் நம்மிடம் இருந்து விலக வேண்டும் என்றால், என்ன செய்வது. இதற்காக ஒரு நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நம்பரை பிரியாணி இலையில் எழுதி தலையணைக்கடியில் வைத்து தூங்கினால் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு வராது. மனது அமைதி பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பிரியாணி இலை இல்லை என்றால் உங்களுடைய இடது கையில் இந்த நம்பரை எழுதி தூங்கி பாருங்கள். மனதில் நிம்மதி இருக்கும். அதுவும் வேண்டாம் என்றால் ஒரு வெள்ளை காகிதத்தில் இந்த நம்பரை எழுதி தலையணைக்கடியில் வைத்து தூங்குங்கள். குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தாலே என்ன ஓட்டம் சீர்படும் மனது அமைதியாகும். நல்ல தூக்கம் கிடைக்கும் அது என்ன நம்பர் தெரிஞ்சுக்கலாமா.
இதையும் படிக்கலாமே: வீட்டில் பல்லி தரும் பலன்கள்
தூக்கத்தை தரும் ஹீலிங் கோட்
‘83651778’ remove emotional blockage healing code என்று ஆங்கிலத்தில் இதை சொல்லுவார்கள். அந்த நம்பரை மட்டும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் போதும். நிச்சயம் மன நிம்மதியை கொடுக்கும். நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரம் உங்களுக்கு பயன்படுட்டும். நீங்கள் இதை ஒரு முறை நம்பிக்கையுடன் பிரயோகப்படுத்தி பாருங்கள். நீண்ட நாட்களாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குபவர்கள் கூட, இந்த நம்பரை கையில் எழுதிக் கொண்டால் தூக்க மாத்திரை சாப்பிடாமல் நன்றாக தூக்கத்தை பெறலாம். ட்ரை பண்ணி பாருங்க.