- Advertisement -
- Advertisement -

பொதுவாக பஞ்சமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் வாராகி அம்மன் தான். அப்படிப்பட்ட பஞ்சமி என்பது ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய பஞ்சமியை கருட பஞ்சமி என்றும் கூறுவோம். இவ்வளவு சிறப்பு மிகுந்த அன்றைய தினத்தில் வாராகி அம்மனை நாம் எந்த முறையில் எல்லாம் வழிபட்டால் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கருட பஞ்சமி அன்று வீட்டில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உரிய நேரங்களாக கருதப்படுவது பிரம்ம முகூர்த்த நேரம், காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள், 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள், மாலை 4:45 மணியிலிருந்து 5:45 மணிக்குள், 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள், இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள். இந்த நேரங்களில் எந்த நேரம் உங்களுக்கு ஏற்ற நேரமாக திகழ்கிறதோ அந்த நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வாராகி அம்மனின் படத்தையோ அல்லது விக்கிரகத்தையோ சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாசனை மிகுந்த பல வகையான மலர்களை வைத்து வாராகி அம்மனுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். தாமரைப் பூ கிடைத்தால் அதை வாராகி அம்மனின் பாதத்தில் வைக்க வேண்டும். அடுத்ததாக விரலி மஞ்சளை அரைத்து அதில் பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.

அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு முன்பாக ஒரு தட்டில் பசும்பாலை ஊற்றி அதில் சிறிது கற்கண்டை போட்டு வைக்க வேண்டும். தட்டில் தான் வைக்க வேண்டும். கிண்ணத்திலோ அல்லது கிளாசிலோ வைக்க கூடாது. அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு பழங்களையும், பானகம், பனங்கருப்பட்டி, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றையும் வைக்கலாம். இதோடு அவல் வெல்லம் இரண்டையும் சேர்த்து பிணைந்து அதையும் வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு முன்பாக ஒரு தட்டை எடுத்து வைத்து அதில் அட்சதையை பரப்பி அதற்கு மேல் ஐந்து அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் தீபம் ஏற்றும் வழக்கம் இருப்பவர்கள் ஒரு தேங்காயை சரிசமமாக உடைத்து கண்ணிருக்கும் பகுதியில் 3 திரிகளையும் கண்ணில்லாத மற்றொரு பகுதியில் இரண்டு திரிகளையும் போட்டு ஐந்து தீபங்களாக ஏற்ற வேண்டும்.

எதிரிகளால் தான் பிரச்சனை வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறுபவர்கள் அன்றைய தினம் வெள்ளைப் பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனின் மூல மந்திரத்தை மனதார 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

ஓம் ச்யாமளாயைச வித்மஹே
சூல் ஹஸ்தாய தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு தட்டில் வைத்திருந்த பாலை எடுத்து அருகில் ஏதேனும் புற்று இருந்தால் அந்த புற்றில் ஊற்றி விட வேண்டும். அப்படி புற்று இல்லாதவர்கள் வேப்பமரம், ஆலமரம், அரசமரம் போன்ற பால் வரும் மரங்களில் அடியில் இந்த பாலை ஊற்றி விட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நாம் பிள்ளையராக பிடித்து வைத்திருக்கும் மஞ்சளை மறுநாளில் இருந்து சிறிது பன்னீர் கலந்து நெற்றியில் தினமும் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய மாங்கல்யத்திலும் இந்த மஞ்சளை வைத்து வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே குபேர யோகம் பெற உதவும் ஒரு வரி மந்திரம்

இப்படி கருட பஞ்சமி அன்று வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது திருமண தடைகள், குழந்தை பாக்கியம், கிரக தோஷங்கள், எதிரிகளால் பிரச்சனை, தொழிலில் முன்னேற்றம், வேலை கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் அனைவருக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

- Advertisement -