- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கருஞ்சீரக ஹேர் டை தயாரிக்கும் முறை

- Advertisement -

வெள்ளை முடி பிரச்சனை என்பது வயதானவர்களுக்கு வருவதை விட இளம் வயதில் இருப்பவர்களுக்கு தான் அதிக அளவில் வருகிறது, அதனாலேயே பலரும் சிறுவயதிலேயே கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். அதில் இருக்கக்கூடிய கெமிக்கல்கள் தலையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு தலைமுடியின் உண்மையான தன்மையையே மாற்றிவிடும். இதோடு மட்டுமல்லாமல் இதில் சேர்க்கக்கூடிய கெமிக்கலால் புற்றுநோய் வருவதற்குரிய அபாயம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் கண் நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் முடிந்த அளவுக்கு மிக நிறைந்த ஹேர்பேக்கை பயன்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. அப்படி இருக்கும் பட்சத்தில் நம்முடைய வெள்ளை முடியை கருமையாக்குவதற்கு இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய தலைமுடிக்கு ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை வைத்து எப்படி ஹேர் டை தயார் செய்வது என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஹேர் டை தயார் செய்வதற்கு நமக்கு சில பொருட்கள் தேவைப்படும். இவை அனைத்துமே எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள்தான். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். முதலில் 50 கிராம் கருஞ்சீரகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதேபோல் கரிசலாங்கண்ணி பொடியையும் 50 கிராம் வாங்கிக் கொள்ள வேண்டும். காய்ந்த நெல்லிக்காயை நெல்லுமுள்ளி என்று கூறுவோம். அந்த நெல்லி முள்ளியும் ஐம்பது கிராம் வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இதை அனைத்தையும் தனித்தனியாக ஒரு இரும்பு கடாயில் போட்டு நன்றாக கருக வருக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து தான் வருக்க வேண்டும். அதிக தீயில் வைத்து வருக்கக்கூடாது. நன்றாக கருமையான பிறகு இதை அனைத்தையும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆரவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

என்றைக்கு நாம் தலைக்கு ஹேர் டை பயன்படுத்த போகிறோம் அன்றைக்கு தலைமுடிக்கு ஏற்றவாறு எவ்வளவு பொடி எடுக்கிறீர்களோ அதாவது நான்கு ஸ்பூன் பொடி எடுத்தால் அதே அளவு 4 ஸ்பூன் அளவிற்கு காபி தூளையும் சேர்க்க வேண்டும். இதனுடன் இப்படி இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு அதை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு தடவ வேண்டும்.

அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடலாம். இதில் சேர்த்து இருக்கக்கூடிய அனைத்து பொருட்களுமே நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய பொருட்களாகவே திகிழ்கிறது என்பதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. அதே சமயம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தும் பொழுது படிப்படியாக நரைமுடி அனைத்தும் கருமையாகவும், புதிதாக நரைமுடி எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: கட்டுக்கடங்காத முடி வளர ஹேர் பேக்

கெமிக்கல் நிறைந்த ஹேர் டை என்னதான் கெமிக்கல் ஃப்ரீ ஹேர் டை என்று சொன்னாலும் அதில் கண்டிப்பான முறையில் கெமிக்கல் கலந்து தான் இருக்கும். அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுத்த தான் செய்யும். கடையில் விற்கக்கூடிய பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தாமல் நாமே நம்முடைய வீட்டில் தயார் செய்து உபயோகப்படுத்தும் பொழுது அதனால் நமக்கு ஆரோக்கியமும் நன்மையும் உண்டாகும்.

- Advertisement -