தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது வயதைக் கடந்த ஒரு பிரச்சினையாகவே திகழ்கிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படும். இந்த முடி உதிர்தல் பிரச்சனையை நீக்குவதற்கும் உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளர செய்யவும் முடியை அடர்த்தியாக வைப்பதற்கும் ஒரே ஒரு ஹர்பாக் இருந்தால் போதும் இந்த அனைத்தையும் நம்மால் செய்த விட முடியும். அப்படிப்பட்ட ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முடி உதிர்தல் பிரச்சனை என்பது நாம் தலைக்கு போடக்கூடிய எண்ணெய் ஹேர் பேக்கால் மட்டுமே சரியாகாது. நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் உணவை பொருத்தும் முடி உதிர்தல் என்பது குறைய ஆரம்பிக்கும். அந்த வகையில் முடி உதிர்தலை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு முக்கியமான உணவுப்பொருளாக திகழ்வதுதான் கருவேப்பிலை.
கருவேப்பிலையை தினமும் நாம் உட்கொண்டு வருவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைத்து முடி உதிர்தல் என்பது குறைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட அற்புதமான கருவேப்பிலையை நம்முடைய தலைமுடிக்கு நாம் தேய்ப்பதன் மூலமும் நமக்கு முடி உதிர்தல் பிரச்சனையை நிறுத்த உதவும். இதோடு இன்னும் சில விஷயங்களையும் நாம் சேர்க்கும் பொழுது நாம் எதிர்பார்த்த அளவுக்கு அனைத்து விதமான நன்மைகளும் நம் தலைமுடிக்கு கிடைக்கும்.
இதற்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மாவை அடுப்பில் வைத்து கெட்டியாக வரும் வரை கிண்ட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆர வைத்து விடுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஒரு கப் அளவிற்கு கருவேப்பிலையை சேர்த்து அதனுடன் இரண்டு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயத்தையும் சேர்த்து வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை மட்டுமே ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு துணியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஹேர்பேக் தயாராகிவிட்டது. இதை தடவுவதன் மூலம் நம் தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். தலைமுடி உதிர்தல் படிப்படியாக குறையும். உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். மேலும் தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் முடி பிளவு சரியாகும்.
இதையும் படிக்கலாமே முகத்தை பளிச்சென்று மாற்ற உதவும் எண்ணெய்
மிகவும் எளிமையான வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும். முயற்சி செய்து பாருங்கள்.