
ஆடி மாதம் பிறந்தாலே ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், என்று திருவிழாக்களுக்கு எந்த குறையும் இருக்காது. ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைக்கு இணையாக, செவ்வாய்க்கிழமைக்கு இணையாக, ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு வழிபாடுகள் ஆரவார திருவிழாக்கள் நடக்கும். அந்த வகையில் ஆடி ஞாயிறு என்றால் கூழ்வார்த்தல் திருவிழா ரொம்ப ரொம்ப சிறப்பு.
ஆடி ஞாயிற்றுக்கிழமையில் அன்னதானம் செய்தால் உங்கள் குடும்பத்தில் தொடரும் கர்ம வினைகள் குறையும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமையில் நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு அம்பாள் கோவிலில் எப்படி பிரார்த்தனை வைக்க வேண்டும் எளிமையான ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டை தெரிந்து கொள்வோமா.
நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைந்த பௌர்ணமி நாளாக இருக்கிறது. கடைக்கு சென்று மூன்று எலுமிச்சம் பழங்கள் பேரம் பேசாமல் கரும்புள்ளிகள் இல்லாமல் வாங்கிக் கொள்ளுங்கள். அதை வீட்டிற்கு கொண்டு வந்து தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
அம்பாளுக்கு வேப்ப இலை, எலுமிச்சம்பழம், பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய் இப்படி பூஜைக்கு தேவையான பொருட்களையும் கூடவே வாங்கிக் கொள்ளுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு வாங்கிய பொருட்களை எல்லாம் கொடுத்து முதலில் உங்களது பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். உங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லா பெயரையும் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அந்த அர்ச்சனை கூடையிலேயே மூன்று எலுமிச்சம் பழத்தை அம்பாள் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக அம்மன் கோவிலில் திரிசூலம் இருக்கும் அல்லவா. அந்த இடத்திற்கு வந்து அமர வேண்டும். திரிசூலம் நேர் எதிராக அமரக்கூடாது என்று சொல்லுவார்கள். திரிசூலத்தின் பக்கவாட்டில் அமர்ந்து இந்த மூன்று எலுமிச்சம் பழங்களையும் வலது உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, அதே கையில் ஒரு கொத்து வேப்பிலையும் இருக்கட்டும், மனம் உருகி உங்களுடைய வேண்டுதலை அம்பாளிடம் சொல்லுங்கள்.
எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டும், பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், கணவருக்கு இருக்கும் தீய பழக்கம் விலக வேண்டும், குடும்பத்தில் வறுமை நீங்க வேண்டும், என்று என்ன வேண்டுதலை வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் ஒரு வேண்டுதலாக இருக்கட்டும்.
இப்போது உங்களுடைய வாழ்க்கையில் எந்த கஷ்டம் ரொம்பவும் பெருசாக இருக்கிறது, அந்த கஷ்டம் சரியாக பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை வலது பக்கமாக மூன்று முறை, இடது பக்கமாக மூன்று முறை சுற்றி, சூலாயுதத்தில் குத்தி அந்த வேப்ப இலையை சூளம் முன்பு போட்டு விட்டு வந்து விடுங்கள்.
உங்களுடைய கஷ்டங்கள் அன்றோடு அம்பாளின் பாதத்திற்கு சென்றது என்று அர்த்தம். நாளை வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று வாய்ப்பு கிடைத்தவர்கள் இந்த வழிபாட்டை செய்யுங்கள். முடியாதவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய ஆடி ஞாயிற்றுக்கிழமையில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுத்து இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர பௌர்ணமி பரிகாரம்
இதோடு சேர்த்து ஞாயிற்றுக்கிழமை உங்களால் முடிந்த கூழ் அல்லது வேறு ஏதாவது பிரசாதத்தை இயலாதவர்களுக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்து பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.