நாளைய தினம் 21/7/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பௌர்ணமியும் சேர்ந்து வரவிருக்கின்றது. உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் கடன் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாகவே வெறும் ஞாயிற்றுக்கிழமையில் திருஷ்டி கழிக்கும் போது நம் உடம்பை பிடித்த திருஷ்டி நீங்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய பௌர்ணமி திதியில் பின் சொல்லக் கூடிய பரிகாரத்தை செய்தால் உங்கள் பிடித்த கடன் கஷ்டம் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை இரவு நிலா பிரகாசமாக ஜொலிக்கும் அந்த நிலவு ஒளி பூமி முழுவதும் பரவி, நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் அந்த சமயத்தில் உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் கடன் சுமை நிச்சயம் குறையும்.
கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு 11 கிராம்பு, 1 துண்டு பச்சை கற்பூரம் தேவை. உங்களுடைய உள்ளங்கைகளில் 11 கிராம்பை வைத்து, உள்ளம் உருக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கடன் காணாமல் போக வேண்டும், கடன் காணாமல் போக வேண்டும், என்று சொல்லி மனதை ஒருநிலை படுத்தி வேண்டுதல் வையுங்கள். பிறகு அப்படியே இந்த கிராம்பை உங்களுடைய தலையை 11 முறை சுற்றுங்கள்.
ஒரு சின்ன மண் அகல் விளக்கில் பச்சை கற்பூரத்தை வைத்து, நெருப்பு மூட்டி இந்த 11 கிராம்பையும் மொத்தமாக அந்த நெருப்பில் போட்டு விடுங்கள். இந்த கிராம்பு எரிந்து சாம்பல் ஆகுவது போல உங்களுடைய கடனும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். அதாவது அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்து கடன் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
நாளை வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணிக்கு மேல், இரவு 12:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளவும். எந்த ஒரு பரிகாரம் முழுமை அடைய வேண்டும் என்றாலும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் நமக்கு தேவை.
இந்த பரிகாரத்தை நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. ஜன்னல் பக்கம் நிலவு ஒளி வந்தாலும், அந்த இடத்தில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பால்கனி மொட்டை மாடி எந்த இடத்தில் உங்களுக்கு சௌகரியமோ அந்த இடத்தை பயன்படுத்தி இந்த பரிகாரத்தை செய்யலாம். வெளியில் சென்று இந்த பரிகாரத்தை செய்வதற்கு இடமே இல்லை எனும் பட்சத்தில் வீட்டுக்குள்ளேயே கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஆடி பௌர்ணமி கிரிவலம் வரும் சூட்சமம் வரும் சூட்சமம்
ஒருவேளை மேகமூட்டத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில் நிலா தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக உங்களுடைய கடன் கஷ்டம் நீங்கும். இதோடு மட்டுமல்லாமல் கிராம்பை நீங்கள் நெருப்பில் போட்டு பொசுக்கும் போது உங்கள் உடம்பை பிடித்த கெட்ட சக்தியெல்லாம் நீங்கி, உங்களைச் சுற்றி ஒரு நல்ல ஆரா செயல்பட தொடங்கிவிடும். அது உங்களுக்கு ஏராளமான செல்வ வளத்தை ஈர்த்துக் கொண்டு வந்து கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.