- Advertisement -

கஷ்டங்களை தீர்க்கும் கணபதி தீபம்

- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே அது சிறப்புக்குரியது தான். அந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது மிகவும் சிறப்பு கூறியதாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக விநாயகர் பெருமானுக்கு உகந்த புதன்கிழமை அன்று வருகிறது என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் விநாயகர் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும் என்றும் அந்த கஷ்டத்தில் இருந்து விரைவிலேயே வெளியே வருவோம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டங்களை தீர்க்கும் கணபதி தீபம்

எந்த ஒரு தெய்வ வழிபாட்டை நாம் செய்யும்பொழுதும் கண்டிப்பான முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். அந்த தெய்வத்தை பொறுத்து எத்தனை எண்ணிக்கையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூட இருக்கிறது. எப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு இருக்கிறதோ அதே போல் தான் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான தீப வழிபாடும் இருக்கிறது. அந்த சூட்சுமத்தை அறிந்து செயல்படுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். கஷ்டங்கள் வந்தாலும் அவை தீர்வதற்குரிய வழி உடனே கிடைத்துவிடும். அந்த வகையில் தான் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விநாயகப் பெருமானுக்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை சங்கடஹர சதுர்த்தி நாளன்று ஏற்றுவது மிகவும் சிறப்புக்குரியது. அதுவும் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது அதன் பலன் நமக்கு அதிக அளவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரே ஒரு இலை வேண்டும். அதுதான் செம்பருத்தி இலை.

பொதுவாக விநாயகப் பெருமானுக்கு செம்பருத்திப்பூவை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான மலர்களில் ஒன்றாக தான் செம்பருத்தி மலர் திகழ்கிறது. அதேபோலத்தான் இந்த செம்பருத்தி இலையும் செம்பருத்தி இலையை பயன்படுத்தி நாம் தீபம் ஏற்றும் பொழுது விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு காலையிலேயே ஒரு இலையைப் பரித்து அதை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் விநாயகப் பெருமானுக்கு எப்பொழுதும் எப்படி வழிபாடு செய்வீர்களோ அதே போல் வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த இலையை எடுத்து அதற்கு மேல் பன்னீரை தடவிக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலைக்கு நடுவே சிறிது சந்தனம் குங்குமம் வைத்து அதற்கு மேலே ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றிய பிறகு விநாயகப் பெருமானுக்கு தங்களால் இயன்ற நெய்வேத்தியத்தை வைத்து உங்களுடைய வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் முன்வைக்க வேண்டும். வேண்டுதலை வைத்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் இதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தையும் விநாயகருக்கு நாம் அருகம்புல், மலர்களை வைத்து வழிபாடு செய்திருப்போம் அல்லவா? அவற்றில் ஏதாவது ஒன்றை அதிலும் குறிப்பாக அருகம்புல் இருந்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அதையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்து பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். செம்பருத்தி இலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இந்த முறையில் நாம் விநாயகர் பெருமானை நினைத்து ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றும் தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுது நாம் எந்த கஷ்டம் தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்தோமோ அது தீர்வதற்குரிய வாய்ப்புகளை விநாயகப் பெருமான் நமக்கு அருள்வார்.

இதையும் படிக்கலாமே:குறைவற்ற செல்வத்தை தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

கஷ்டமில்லாத மனிதன் என்று யாரும் இல்லை. அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்குரிய வழியை கண்டுபிடிப்பது தான் அந்த மனிதனின் சாமர்த்தியம் இருக்கிறது. அந்த சாமர்த்தியத்தை தரக்கூடிய விநாயகர் பெருமானை நினைத்து இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -