- Advertisement -

கேட்டது கிடைக்க கந்த சஷ்டி பரிகாரம்

- Advertisement -

கந்த சஷ்டி திருவிழாவை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்குரிய வழிமுறைகள் பல இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது நம்மால் முடிந்த அளவிற்கு நாம் சுத்தமாக இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக அவர்களால் சுத்தமாக இருக்க முடியவில்லை என்றாலோ, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதாந்திர பிரச்சினையாக இருந்தாலும், பிறப்பு இறப்பு தீட்டு போன்றவற்றில் இருந்தாலும் இந்த கந்த சஷ்டி விரத வழிபாட்டை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் சூரசம்கார நாளன்று இரவு 12 மணிக்குள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கேட்டது கிடைக்க கந்த சஷ்டி பரிகாரம்

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த எளிமையான பரிகாரத்தை எந்தவித மத வேறுபாடும் இன்றி யார் வேண்டுமானாலும் செய்யலாம். முருகப்பெருமானை மனதார நம்பி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் குறிப்பிடத்தக்கது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் கந்த சஷ்டி விரதம் இருக்க முடியவில்லை சூரசம்கார நாளில் விரதம் இருக்க முடியவில்லை என்று வருத்தப்படாமல் முருகப்பெருமானை நம்பி இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்கள் கேட்டது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய நாளிலிருந்து தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விரதம் இருந்து ஆறாவது நாள் சூரசம்காரம் நடைபெற்ற பிறகு வீட்டில் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலர் சூரசம்கார நாள் அன்று மட்டும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு முருகனின் அருளால் அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது தான் முற்றிலுமான உண்மை. ஒரு சிலரால் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களும் முருகப்பெருமானிடம் மனதார வேண்டி வேண்டிய வரத்தை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இந்த பரிகாரத்தை சூரசம்கார நாள் அன்று இரவு 12 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரே ஒரு பிரியாணி இலையும், சிவப்பு நிறத்தில் எழுதக்கூடிய பேனா, ஸ்கெட்ச், மார்க்கர் என்று ஏதாவது ஒன்று வேண்டும். இந்த பரிகாரத்தை வீட்டில் எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். சுத்தமான ஒரு பிரியாணி இலையாக எடுத்துக் கொள்ளுங்கள். லேசாக கிழிந்திருந்தாலும் பரவாயில்லை. அதில் எந்தவித தவறும் இல்லை. இப்பொழுது சிவப்பு நிற பேனாவை எடுத்து அந்த பிரியாணி இலையில் முருகப்பெருமானின் நட்சத்திர கோலத்தை போட வேண்டும்.

- Advertisement -

அந்த நட்சத்திரத்திற்கு நடுவே ஓம் என்று எழுத வேண்டும். அந்த நட்சத்திரத்தை சுற்றி சரவணபவ என்று எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ, நம்முடைய கோரிக்கைகள் என்னவோ அதை ஒரே வார்த்தையில் ஆறு முறை எழுத வேண்டும். நேர்மறையான வார்த்தையை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பணம் வேண்டும் என்னும் பட்சத்தில் எவ்வளவு வேண்டுமோ அந்த தொகையை எழுதலாம். திருமணம் நடைபெற வேண்டும் என்றால் திருமணம் என்று எழுதலாம். வேலை கிடைக்க வேண்டும் என்றால் வேலை என்று எழுதலாம். நோய்கள் தீர வேண்டும் என்றால் ஆரோக்கியம் என்று எழுதலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவாக இருக்கிறதா ஒற்றுமை என்று எழுதலாம். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமா? படிப்பு என்று எழுதலாம்.

இப்படி நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை ஒரே வார்த்தையில் நேர்மறையான வார்த்தையை பயன்படுத்தி அந்த பிரியாணி இலையின் முன்புறமோ அல்லது பின்புறமோ ஆறு முறை எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்துவிட்டு இதை உங்களுடைய பரிசில் வைத்துக் கொள்ள வேண்டும். பரிசில் எந்தவித தேவையற்ற பொருட்களும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுகிறதோ அதுவரை இந்த பிரியாணி இலை உங்களுடைய பர்சில் இருக்கட்டும். வேண்டுதல் நிறைவேறிய பிறகு இதை எரித்து அதன் சாம்பலை தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:தோல்விகள் வெற்றிகளாக மாற கந்த சஷ்டி வழிபாடு

பிரியாணி இலையை பயன்படுத்தி பல தாந்திர பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக திகழக்கூடிய இந்த பரிகாரத்தை முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்ற தகவலை கூறு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -