- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இந்த சீக்ரெட் மட்டும் உங்களுக்கு தெரிஞ்ச போதும், செலவே பண்ணாம, பார்லர் போகாம கேரள பெண்களை போல வசீகர அழகுடன் ஜொலிப்பீங்க. அப்புறம் பாக்குறவங்க எல்லாம் நீங்க கேரளவான்னு கேப்பாங்க.

- Advertisement -

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெண்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் இருக்கும் பெண்கள் எப்பொழுதுமே ஒரு வசீகர அழகுடன் தோற்றம் அளிப்பார்கள். மற்ற மாநில பெண்களுக்கு இல்லாத ஒரு வசீகரத் தன்மையும், அழகும் இந்த கேரள பெண்களுக்கு மட்டும் எப்படி என்ற கேள்வி அனைவரும் எழுவது உண்டு. உங்களின் அந்த கேள்விக்கான பதிலாக இந்த அழகு குறிப்பு பதிவு இருக்கும். வாங்க இந்த கேரள பெண்களின் வசீகர அழகை பெறுவதற்கான ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

கேரள பெண்களின் அழகுக்கு அவர்களின் உணவு முறைகள், தட்பவெட்ப நிலை, அவர்கள் வாழும் சூழ்நிலை இவை அனைத்துமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் பெரும்பாலும் இயற்கையான உணவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

- Advertisement -

இவை மட்டுமல்லாது அவர்கள் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க ஆமணக்கு எண்ணெயும், தேங்காய் எண்ணெய், பால், இயற்கையான சந்தனத்துடன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தேய்ப்பது என முழுக்க முழுக்க இயற்கையான பொருள்களையே பயன்படுத்துவதால் அவர்களின் சருமம் எப்பொழுதும் பாதிப்படையாமல் நல்ல ஒரு வசீகரத் தன்மையுடன் இருக்கிறது.

இத்துடன் சேர்த்து இந்த ஒரு பேக்கையும் கேரள பெண்கள் அதிகமாக பயன் படுத்துகிறார்கள். அது என்ன எப்படி பயன்படுத்துவது என்பதையும் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கேரள பெண்களின் வசீகர அழகை பெற:
இந்த பேக் தயாரிக்க ஒரு பவுலில் முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இதற்கு கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவது நல்லது. இவற்றை கலக்க இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் இவை எல்லாம் ஒன்றாக குழைத்து நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பசும் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு காட்டன் பஞ்சையும் எடுத்து பாலில் நனைத்து முதலில் உங்கள் முகம் முழுவதும் பாலை வைத்து ஒற்றி எடுத்து இரண்டு நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை அலம்பி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த பேக்கை முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் அப்படியே காய விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து லேசான மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டியது தான். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் கூட போதும். உங்கள் முகம் எப்போதும் நல்ல பளபளப்புடன் இருப்பதுடன் வசீகர தோற்றத்துடனும் தெரிவீர்கள்.

இதையும் படிக்கலாமே: இந்தப் பூ நம்ம முகத்தை நடிகை போல மாத்துமா? பளிங்கு போல இளமையாக முகம் ஜொலிக்க இந்த பூவை என்ன செய்யணும் தெரியுமா?

இந்த முறையில் பேக் செய்து பயன்படுத்துவதுடன், நாமும் நம்முடைய வாழ்வியல் முறைகளை மாற்றி இயற்கையான உணவு முறைகளை பின்பற்றி வாழுவோம்.

- Advertisement -