இந்தப் பூ நம்ம முகத்தை நடிகை போல மாத்துமா? பளிங்கு போல இளமையாக முகம் ஜொலிக்க இந்த பூவை என்ன செய்யணும் தெரியுமா?

avaram_poo_tamil
- Advertisement -

மருத்துவ குணம் அதிகம் நிறைந்துள்ள இந்த ஒரு பூ ஆவாரம்பூ எனப்படுகிறது. ஆவாரம் பூ எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை வகையாக இருக்கிறது. இதில் இருக்கும் நற்குணங்கள் உடலுக்கு மட்டுமல்லாமல், சரும அழகையும் பேணி பாதுகாக்க பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வீட்டிலேயே எப்படி ஆவாரம் பூவை கொண்டு எளிதாக சருமத்தை பளிங்கு போல ஜொலிக்க செய்வது? என்கிற அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

ஆவாரம் பூவில் இருக்கும் நற்குணங்கள் வெயிலினால் பாதிக்கப்பட்ட சருமத்தை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சருமம் பொலிவிழந்து டல்லாக காணப்பட்டால், ஆவாரம் பூவை பயன்படுத்தலாம். முதலில் ஆவாரம் பூவை பறித்து வந்து நன்கு வெயில் போட்டு மொறு மொறு என்று ஆகும் வரை உலர்த்தி பின்பு மெஷினில் கொடுத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அடிக்கடி எளிதாக பயன்படுத்த முடியும்.

- Advertisement -

ரெண்டு டீஸ்பூன் ஆவாரம் பொடியுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் சேர்த்து ரெண்டு ஸ்பூன் காய்ச்சாத பசும்பால் ஊற்றி பேஸ்ட் போல மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் தடவி நன்கு உலர்ந்ததும் கழுவி விடுங்கள். இது போல செய்து வந்தால் வெயில் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும பாதிப்புகள் உடனடியாக நீங்கி சருமம் பொலிவுறும்.

சருமம் முகச்சுருக்கம் இல்லாமல், கருவளையங்கள் தோன்றாமல் எப்பொழுதும் இளமையாக குழந்தை போல மென்மையான தன்மையுடன் இருப்பதற்கு இந்த ஆவாரம் பொடி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, 2 சொட்டுக்கள் எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் போல கலவை செய்து கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் நன்கு உலர விட்டு விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் மெத்தென்று பஞ்சு போல மிருதுவாக முகம் மாறும்.

- Advertisement -

தினமும் குளிப்பதற்கு சோப்பிற்கு பதிலாக இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் ஆவாரம் பூ பொடியும் சேர்த்து, பால் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மட்டும் தடவி உலர விட்டு பின்பு சோப்பு எதுவும் போடாமல், முகத்தை கழுவி வந்தால் முகம் மாசு மறுவற்ற சருமமாய் ஜொலிக்கும். சோப்பினால் உண்டாகிய பக்க விளைவுகளும் மெல்ல மறையும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஒரு சீயக்காய் தூள் அரைத்து வைத்துக் கொண்டால் போதும். தலை முடி அது பாட்டுக்கு காடு போல வளர்ந்து கொண்டே செல்லும். எவ்வளவு வயசானாலும் வழுக்கை வரவே வராது.

வறண்ட சருமம் கொண்டவர்கள் ஆவாரம் பூ பொடியுடன் தயிர் சேர்ந்து ஃபேஸ் பேக் போடலாம். அதுவே எண்ணெய் பசை கொண்ட சருமம் உடையவர்கள் எலுமிச்சை சாறு சேர்த்து ஆவாரம் பொடியுடன் பேஸ் பேக் போடலாம். அதிகம் முகப்பரு காணப்பட்டால் கற்றாழை ஜெல்லுடன் ஆவாரம் பொடி பூ சேர்த்து பேக் போட்டால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமை மறைய குங்குமப்பூ இழைகளுடன், சந்தனம் சேர்த்து ஆவாரம்பூ பொடியுடன் பேக் போட்டால் செம ரிசல்ட் தெரியும். சாதாரணமாக தினமும் பன்னீர் சேர்த்து ஆவாரம் பொடியுடன் பேக் போட்டு வந்தால் முகம் என்றுமே வெள்ளை வெளேர் என பளிங்கு போல ஜொலிக்கும்.

- Advertisement -