- Advertisement -

கேட்டதை கொடுக்கும் ஏலக்காய் பரிகாரம்

- Advertisement -

பெருமாளுக்குரிய மாதங்களில் மிகவும் முக்கியமான ஒரு மாதமாக திகழ்வது புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாகவே கருதப்படுகின்றன. இருப்பினும் அதில் குறிப்பிடத்தக்க வகையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையும் புதன்கிழமையும் பெருமாளை வழிபாடு செய்வதற்கு அதி அற்புதமான நாட்களாக திகழ்கின்றன. அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கேட்டதை கொடுக்கும் பரிகாரம்

பெருமாளின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவருக்கு கண்டிப்பான முறையில் மகாலட்சுமியின் அருள் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் புதன் பகவானின் அருளும், சனீஸ்வர பகவானின் அருளும் ஒரு சேர கிடைத்துவிடும். மேலும் சுக்கிரர் மற்றும் குபேரரின் அருளையும்
நம்மால் எளிதில் பெற்று விட முடியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பெருமாளின் வழிபாட்டை செய்யக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் புரட்டாசி மாதம் திகழ்கிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்கள் மட்டும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும் வேண்டியது கிடைக்கும்.

- Advertisement -

அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையோடு புரட்டாசி நிறைவடைகிறது. இன்னும் மூன்று நாட்களே புரட்டாசி மாதம் நிறைவடைவதற்கு இருக்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் கடைசி புதன் கிழமையாக அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியும் நிறைவடையக்கூடிய நாள் ஏகாதேசி மற்றும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இப்படி பல சிறப்புகள் நிறைந்த இந்த நாட்களில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஏலக்காய் பரிகாரம் நம்முடைய வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும்.

ஏலக்காய் பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் உரிய ஒரு பொருளாகவும் பண வசியத்தையும் ஏற்படுத்தும். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்தவித தீட்டும் இதற்கு தடைகள் கிடையாது. நம்முடைய விருப்பத்தை பெருமாளிடம் ஏலக்காயை பயன்படுத்தி கூறுகிறோம் என்பது மட்டுமே இந்த பரிகாரத்திற்குரிய நோக்கமாக திகழ்கிறது. இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தக்கூடிய ஏலக்காய் பச்சை நிறத்தில் வாசனை மிகுந்த புதிய ஏலக்காயாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் செய்ய வேண்டும். அதாவது புரட்டாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் மிகவும் சிறப்பு மிகுந்த நாட்களாக திகழ்வதால் இந்த மூன்று நாட்களில் பெரும்பாளிடம் நாம் ஏலக்காயை பயன்படுத்தி வேண்டுதலை முன்வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு முகம் கை கால்களை கழுவி விட்டு ஒரு ஏலக்காயை எடுத்து நம்முடைய வாயின் வலது பக்கத்தில் இருக்கக்கூடிய கடைப்பற்களுக்கு நடுவே வைத்து விடுங்கள்.

இப்பொழுது உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும் நீண்ட நாட்களாக அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் அது நடைபெறவில்லை என்னும் வேண்டுதலாக இருக்க வேண்டும். அந்த வேண்டுதலை முழுமனதோடு பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் நினைத்துக் கொண்டு அந்த ஏலக்காயை கடித்த வண்ணம் மனதிற்குள் கூற வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு ஏலக்காயை கடிக்கும் பொழுது ஏலக்காயில் இருந்து சாறுகள் வரும். அந்த சாறை முழுங்க வேண்டும். இப்படி ஐந்து நிமிடம் கூற வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இந்த ஏலக்காயை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது குப்பையிலோ போட்டுவிடலாம். இப்படி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஒரே வேண்டுதலை முன்வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காயை வைத்துக்கொண்டு பெருமாளிடமும் மகாலட்சுமி தாயார் இடமும் கூறும் பொழுது அவர்களின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: பணம் பெருக நாணயங்கள்

பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் உரிய ஏலக்காயை பயன்படுத்தி முழு நம்பிக்கையோடு வேண்டுதலை முன்வைக்க விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -