- Advertisement -
ஜோதிடம்

கேதுவால் ஏற்படும் உடல் உபாதைகள்.

- Advertisement -

நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு காரணமாக விளங்குவது நவகிரகங்களே. அப்படிப்பட்ட நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் கேது பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பகவானால் தோஷம் ஏற்படும் பொழுது அவருக்கு பல விதங்களில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் உடல் ரீதியாக ஏற்படக்கூடிய உபாதைகள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக அனைத்து கிரகங்களின் பெயர்ச்சியையும் காட்டிலும் ராகு கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படிப்பட்ட கிரகங்களில் ஒருவரான கேதுவால் நம் ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் ஏற்பட்டாலும் அதே சமயம் குரு, சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களுடன் இணைந்து அந்த கிரகங்களை விட ஆதிக்கம் அதிகமாக பெற்றிருந்தாலும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை கேது பகவான் தருவார்.

- Advertisement -

பொதுவாக கேது பகவான் தரும் உபாதைகளை நம்மால் வெளி தோற்றத்தில் பார்க்க இயலாது. உள்ளுக்குள் இருந்து மெதுமெதுவாக நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய ஆற்றல் கேது பகவானுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாம் கூறுவது பாக்டீரியா தொற்று நோய்கள் போன்றவை. கட்டிகள், வீக்கம் போன்றவை ஏற்படுவதற்கும் கேது பகவான் காரணமாக விளங்குகிறார். அதிலும் குறிப்பாக கேன்சரை குறிப்பாக கூறலாம்.

கேது பகவானுக்குரிய உறுப்புகளாக வயிறு, குடல், பாதம், நகம், மூளை மண்டலம், கழுத்துப் பின்பகுதி, அடி வயிறு போன்றவை திகழ்கிறது. இந்த உறுப்புகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு கேதுவே காரணமாக திகழ்கிறார். அது மட்டுமல்லாமல் உடலில் சூடு ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், பித்தம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கேது பகவான் காரணமாக விளங்குகிறார். ஆபரேஷன் செய்வது, உடல் உறுப்புகளை மாற்றுவது, உடல் உறுப்புகளை நீக்குவது இவை அனைத்திற்கும் கேது பகவான் காரணமாக திகழ்கிறார்.

- Advertisement -

இப்படி கேது பகவானால் நமக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்குவதற்கு நாம் செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம். கேது பகவானின் அதி தேவதையாக விளங்க கூடியவர் விநாயகப் பெருமாள். விநாயகப் பெருமானை நாம் வழிபடுவதன் மூலம் கேதுவால் ஏற்படக்கூடிய தோஷங்களில் இருந்து விடுபடலாம். அதே சமயம் சாதுக்கள், குருமார்கள் என்று பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதன் மூலமும், அவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதன் மூலமும், உதவி செய்வதன் மூலமும் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்க பெறும். பாவம் நீங்குவதால் பாவ கிரகமாக கருதப்படக் கூடிய கேது பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி, நட்சத்திரக்காரர்கள் யாரிடம் ஜாக்கிரதையா இருக்கணும்?

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகுவதோடு மட்டுமல்லாமல் ஜாதகத்தில் இருக்கக் கூடிய தோஷங்களையும் கருத்தில் கொண்டு அதற்குரிய பரிகாரத்தை மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் விரைவிலேயே மேம்படும்.

- Advertisement -