அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி, நட்சத்திரக்காரர்கள் யாரிடம் ஜாக்கிரதையா இருக்கணும்?

suriyan
- Advertisement -

இந்த நான்கு ராசிக்காரர்களும் சூரிய கர்மாவை கொண்ட நட்சத்திரகாரர்கள் என்று ஜோதிடத்தில் சொல்லுவார்கள். சூரிய கர்மா என்றால் என்ன. முதலில் நாம் அதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. சூரியனின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள் இந்த நான்கு நட்சத்திரங்கள். சூரிய தோஷம் கொண்ட நட்சத்திரங்கள் இந்த நான்கு நட்சத்திரங்கள்.

சரி, அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சூரிய கர்மாவை கொண்ட நட்சத்திரக்காரர்கள். இவர்களுக்கு சூரிய கர்மா குறைந்து, சூரியனின் அனுக்கிரகத்தை பெற வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம். இந்த நான்கு நட்சத்திரக்காரர்கள் யாரிடம் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும் என்பதை பற்றிய ஜோதிடம் சார்ந்த சில தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சூரிய கர்மாவை குறைக்க பரிகாரம்

உங்களுக்கு இருக்கும் சூரிய கர்மாவை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களால் முடிந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டும். எப்படி? பொதுவாகவே இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மருத்துவத்தில் அனுபவம் நிறைய இருக்கும். இந்த வியாதிக்கு, இந்த மருத்துவமனைக்கு சென்றால், இவ்வளவு குறைவான செலவில் தீர்வு கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, உங்களுக்குத் தெரிந்த இந்த தகவலை நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் சொன்ன அந்த தகவல்களின் மூலம் பாதிக்கப்பட்டவர், பலன் அடைந்தால். உங்களுக்கு சூரிய பகவானின் அனுகிரகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சூரிய கர்மா குறையும். உதாரணத்திற்கு ஒருவருக்கு ரொம்ப நாளா கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கு. எவ்வளவு மருத்துவரை பார்த்து சரியாகவில்லை. கையில் பணமும் இல்லை, இதற்கு மேல் செலவு செய்வதற்கு.

- Advertisement -

உங்களுக்கு ஒரு கிட்னி டாக்டரை தெரியும். அவரிடம் போனால் குறைந்த செலவில் இந்த கிட்னி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆலோசனையை, கிட்னி நோயாளிக்கு நீங்க சொல்லணும். அவர் அந்த மருத்துவரிடம் சென்று அந்த கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டால் இதன் மூலம் உங்களுக்கு சூரிய கர்மா குறையும். ஏன் தெரியுமா மருத்துவம் மருத்துவம் என்று சொல்கின்றோம். மருத்துவ கடவுள் இந்த சூரிய பகவான் தான்.

அதேபோல நீங்களும் மருத்துவ செலவில் கொஞ்சம் உஷாரா இருக்கணும். உங்களுக்கே உடம்பு சரியில்லை. ஒரு மருத்துவமனைக்கு செல்கிறீர்கள். உங்களை ஏமாற்றவே நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். 50,000 ரூபாயில் முடிய வேண்டிய செலவு, 5 லட்சம் வரை இழுத்தாலும் சொல்வதற்கு ஆச்சரியப்படுவதற்கு இல்லை உஷார்.

- Advertisement -

கூடுமானவரை இந்த நட்சத்திரத்தைக் கொண்ட நபர்கள் ஹாஸ்பிடலில் பெட்டில் அட்மிட் ஆகாதவாறு பார்த்துக் கொள்ளவும். டாக்டர் கிட்ட போயிட்டு வந்து மருந்து மாத்திரை வாங்கி, வீட்டிலேயே சாப்பிட்டு உடம்பை சரி பண்ணிக்கோங்க.

சூரிய கர்மாவை கொண்ட ராசிக்காரர்கள் யாரிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்

நீங்கள் சிம்ம ராசி, சிம்ம லக்னம் கொண்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற காரணமாக இருப்பவர்களும் இவர்கள்தான். நீங்கள் வாழ்க்கையில் வீழ்வதற்கு காரணமாக இருப்பவர்களும் இவர்களாகத்தான் இருப்பார்கள். சிம்ம ராசி, சிம்ம லக்னக்காரர்கள் தான் உங்களுக்கு நண்பர்களும், எதிரியும். இவர்களில் நமக்கு யார் நல்லது செய்ய வருகிறார்கள் யார் கெடுதல் செய்ய வருகிறார்கள் என்பதை நீங்கள் தான் உங்களுடைய அறிவாற்றலை வைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

அதேபோல கார்த்திகை, உத்திரம், உத்திராடம், இந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் சூரிய நட்சத்திரக்காரர்கள். இவர்களிடம் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இவர்களும் உங்களுடைய வாழ்க்கையை கை தூக்கி விடுவதற்கு காரணமாக இருப்பார்கள். அதேபோல வாழ்க்கையில் பிரச்சனை வருவதற்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் தான் காரணமாக இருப்பார்கள்.

அதேபோல நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் அதிகாரிகளாக ஒருவர் இருப்பார்கள் அல்லவா. உங்க மேனேஜர், டீம் லீடர், ஷிப்ட் இன்சார்ஜ், அவர்களிடம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு சீனியர். அவர்கள் நினைத்தால் உங்களை வாழ்க்கையில் மேலே தூக்கி விடலாம், அல்லது துரோகம் செய்து அதல பாதாளத்திலும் தள்ளி விடுவார்கள். நண்பர்கள் போல தான் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கே துரோகம் செய்து விடுவார்கள்.

அடுத்து இந்த நான்கு நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் தந்தையை முழுசாக நம்ப கூடாது. அதாவது எந்த தந்தையும், தன்னுடைய பிள்ளை தவறான பாதையில் செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் இந்த நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் தந்தை எடுக்கும் முடிவை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அதே சமயம் தந்தையை மதிக்காமலும், தந்தை சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமலும் இருக்க கூடாது. தந்தை உங்களுக்கு நல்லது தான் செய்வார். அந்த நல்லது உங்களுக்கு ஏற்றதா என்பதை நீங்கள் ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளவும். தந்தை வழியில் நிறைய நன்மை கிடைக்கும். ஆனால் தந்தையால் சில பிரச்சனைகளும் வரும்.

இதையும் படிக்கலாமே: வீட்டை பாதுகாக்க நிலை வாசலில் கட்ட வேண்டிய முடிச்சு

பின்குறிப்பு: இந்த நான்கு நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கும் ஜாதகம் ஒரே மாதிரி இருக்காது. பொதுப்படையாக ஜோதிடத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட விஷயங்கள்தான் இவை. இது தவிர அவரவருடைய சுய ஜாதகத்தில் கிரகணங்கள் அமருவதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுதல்கள் ஏற்படும். மேல் சொன்ன ஜோதிடம் சார்ந்த பொதுப்படையான இந்த தகவல்கள் உங்களுக்கு பயன்படும்படி அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -