- Advertisement -

கிரக கோளாறு நீங்கும் துளசி தீர்த்தம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் கிரக அமைப்பு என்பது சிறப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கிரகங்களும் அவர்களுக்கு உரிய இடத்தில் இருந்து யாரை பார்க்க வேண்டுமோ அவர்களை பார்த்தால் தான் நன்மைகள் உண்டாகும். இதற்கு மாறாக வேறு யாரையாவது பார்த்தோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால் அதனால் பிரச்சனைகளை உண்டாகும். அப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான துளசி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கிரக கோளாறு நீங்கும் துளசி தீர்த்தம்

நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அனைத்து தெய்வங்களும் நமக்கு உறுதுணையாக தான் இருப்பார்கள். இருப்பினும் ஒரு சில விஷயங்களுக்கு ஒரு சில தெய்வங்களை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையாக திகழ்வதுதான் கிரக தோஷங்கள். கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்குவதற்கு நாம் துளசி அம்மனை வழிபட வேண்டும். துளசி அம்மனை வழிபடுவதற்கு இயலாதவர்கள் துளசி இலையை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அனுதினமும் நாம் செய்ய வேண்டும். நம்முடைய வீட்டு பூஜை அறையில் கண்டிப்பான முறையில் பஞ்சபாத்திரம் என்பது இருக்கும். அதில் நாம் தண்ணீர் பிடித்து வைத்திருப்போம். இந்த தண்ணீரை அனுதினமும் மாற்ற வேண்டும் என்பது நியதி. ஒரு முறை பிடித்து வைத்து அதை ஒரு வாரம், பத்து நாள் வரை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கக் கூடாது. அதனால் கூட நமக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

இப்படி நாம் தினமும் மாற்றக்கூடிய இந்த பஞ்ச பாத்திர தீர்த்தத்தில் ஒரே ஒரு துளசி இலை, சிறிது கிராம்பு, சிறிது பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்து வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இந்த தீர்த்தத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் வழிபாட்டை முடித்த பிறகு பருக வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய உடலும் ஆரோக்கியமாக திகழும்.

- Advertisement -

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நாம் வீட்டில் பூஜை செய்வதற்காக வளர்க்கக்கூடிய துளசி செடியிலிருந்து துளசியை பறிக்கக் கூடாது என்பதுதான். நாம் எப்பொழுது துளசி செடியை வழிபட ஆரம்பித்து விட்டோமோ அப்பொழுதே அதை நாம் கடவுளாக நினைத்து விட்டோம் என்று அர்த்தம். அப்படி இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து இலைகளை பறிக்கக் கூடாது.

அதற்கு மாறாக இப்படி இலைகளை பறிப்பதற்காகவே தனியாக ஒரு துளசி செடியை வளர்க்க வேண்டும். அதிலிருந்து தான் இலைகளை பறித்து பஞ்ச பாத்திரத்தில் போட வேண்டும். பஞ்ச பாத்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் சாதாரண கிளாஸில் கூட தண்ணீரை பிடித்து வைத்து இப்படி துளசி இலை, கிராம்பு, பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க திருஷ்டி கழிக்கும் முறை.

மிகவும் எளிமையான இந்த துளசி வழிபாட்டை நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் செய்து கிரக தோஷத்தை நீக்கி மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -