
இன்றைய தினம் முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை திதி இருக்கிறது. முருக பெருமானை தவறாமல் வழிபாடு செய்ய வேண்டிய நாட்களில் இதுவும் ஒன்று. இன்று மாலை உங்களுடைய வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை சொன்னால் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும். கேட்டதை கொடுக்கக்கூடிய எளிமையான மந்திரத்தையும், எளிமையான வழிபாட்டையும் தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
கிருத்திகையில் முருகனை ஆறு விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். வெற்றிலை விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். முருகன் கையில் இருக்கும் வேலிற்க்கு அபிஷேகம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். இப்படி நீங்கள் முருகனை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதே போல எளிமையான கிருத்திகை வழிபாட்டை பக்தியோடு செய்து முடித்து விடுங்கள். கூடவே இன்று மாலை ஒரு மா இலையையும் உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெரும்பாலும் நம்முடைய தமிழ்நாட்டில் இந்த மாயிலை சுலபமாக கிடைக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் ஒரே ஒரு மாயிலை போதும். அந்த மாயிலையை கொண்டுவந்து அதன் மேலே ஒரு பேனாவின் மூலமோ அல்லது ஒரு ஸ்கெட்ச் பென்சில் மூலமோ ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை எழுதி அந்த மாஇலையை கையில் வைத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு பச்சை நிறம் சிவப்பு நிறம் ரொம்பவும் பிடித்தமானது. இதில் எந்த நிறத்தில் வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த மாயிலையின் மேல் ஸ்கெட்ச் பேனாவில் ஓம் சரவணபவ என்று எழுதி விடவும்.
இந்த மாயிலையை கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய கஷ்டங்களை முருகப்பெருமானிடம் சொல்லி, மனம் உருகி பிரார்த்தனை செய்துவிட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள். கணக்கு வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 5 நிமிடம், 10 நிமிடம் என்று நேரத்தை முடிவு செய்து கொண்டு முருகனின் முன்பு அமர்ந்து எனக்கு இந்த நல்லது கட்டாயம் தேவை என்றால், அந்த தேவையை அடம்பிடித்து கேட்டாலும் தவறு கிடையாது.
முருகன் நம்முடைய அப்பன். நாம் அவனின், குழந்தை செல்லமாக அடம்பிடித்து கேட்பதன் மூலம் நமக்கும் முருகனுக்கும் இருக்கக்கூடிய நெருக்கம் அதிகமாகவே தவிர, முருகன் நம்மை கண்டு கோவித்துக் கொள்ள மாட்டான். (மங்களம் பொருந்திய நேர்மறை ஆற்றல் பொருந்திய, இந்த பிரபஞ்சத்தின் நேர்மறை ஆற்றலை தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளக்கூடிய மாஇல்லையில் முருகர் மந்திரத்தை எழுதும்போது நிச்சயம் ஒரு அதிசயம் உங்களுக்கு நடக்கும். நம்பிக்கையோடு இதை செய்பவர்களுக்கு மட்டும் தான் அது புரியும்).
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் ஐப்பசி கிருத்திகை பரிகாரம்
இந்த வழிபாட்டை முடித்துவிட்டு மாயிலையை முருகர் திரு உருவப் படத்திற்கு முன்பாக வையுங்கள். மாயிலை நன்றாக காய்ந்த பிறகு, அதை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிடலாம். தவறு ஒன்றும் கிடையாது. முருகனை உணர்ந்து உள்ளம் உருக எவர் ஒருவர் இன்று சரவணபவ மந்திரத்தை உச்சரிக்கிறாரோ, அவர்களுக்கு முருகனின் அருள் ஆசியும் நிச்சயம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.