- Advertisement -

கோடீஸ்வர யோகம் தரும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை

- Advertisement -

இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இந்த மகாலட்சுமி வழிபாட்டை எவர் ஒருவர் வீட்டில் செய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயம் சுக்கிர யோகம் அடிக்கும். கோடி கோடியாக பணம் கொட்டும். செல்வ செழிப்பில் அவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்கு உண்டான எளிமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கோடிஸ்வர யோகம் தரும் ஆடி வெள்ளி வழிபாடு

ஆடி மாதம் காலை, மகாலட்சுமி வழிபாடு செய்வது விட, மாலை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். இன்று மாலை 6:00 மணிக்கு மேலே உங்களுடைய வழிபாட்டை வீட்டில் தொடங்குங்கள். முதலில் பூஜையறையை வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்யுங்கள். இந்த பூஜைக்கு மிக மிக முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் தாமரைப்பூ. அதிலும் 8 இதழ்களை கொண்ட தாமரைப் பூ வேண்டும் என்று பூக்கடைக்காரரிடம் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உடனடியாக உங்களுக்கு இந்த தாமரை பூ கிடைக்காது என்றால் என்ன செய்வது. பூஜை அறையில் இருக்கும் அலமாரியையோ அல்லது தரையையோ மஞ்சள் தண்ணீர் தெளித்து நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். அந்த இடத்தில் பச்சரிசி மாவை அரைத்து 8 இதழ்கள் கொண்ட தாமரைப் பூவை வரைந்து அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள்.

எட்டு இதழ்கள் கொண்ட தாமரைப்பூ, எட்டு இதழ்கள் கொண்ட மாக்கோலம் இரண்டையும் சேர்த்து பூஜை அறையில் போட்டு வழிபாடு செய்தாலும் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இந்த வழிபாட்டின் போது வெள்ளை நிறத்தில் பால் பாயாசம் ஏலக்காய் நெய் முந்திரி திராட்சை சேர்த்து மனமான பாயாசத்தை வைத்து மகாலட்சுமிக்கு நெய்வேதியம் செய்து வைக்க வேண்டும். இது தவிர பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கு, தூபம் அலங்காரங்கள் எல்லாம் தயாராகட்டும்.

- Advertisement -

முடிந்தால் 108 மகாலட்சுமி போற்றி சொல்லுங்கள் இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இன்றைய தினம், மனம் உருகி மேல்சொன்ன எளிமையான வழிபாட்டை வீட்டில் செய்தால் உங்கள் பணகஷ்டம் இன்றோடு முடிந்தது என்று எழுதி வைத்துக் கொள்ளலாம் அத்தனை சக்தி வாய்ந்த நாள் இன்று.

முடிந்தால் குடும்பத்தோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் பூஜை முடிந்தவுடன் அந்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணலாம். இந்த வழிபாட்டோடு சேர்த்து இன்னொரு ஒரு அறிய தகவலையும் பெண்களுக்காக இன்றைய பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த 8 இதழ் கொண்ட தாமரைக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகம் இருக்கிறது.

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் நகை என்றால், அது டாலர் செயின் தான். தாமரையை டாலராக அணிந்து கொண்டிருப்பார்கள். சில பேருக்கு இது தெரிந்திருக்கும். 8 இதழ்களைக் கொண்ட தாமரையை பெண்கள் கழுத்தில் நெஞ்சுக்கு நேராக போட்டுக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம் கொழிக்கும் என்பதும் நம்பிக்கை.

அந்த காலத்தில் திருமணம் செய்து கொடுக்கக்கூடிய அவர்கள் வீட்டுப் பெண்ணுக்கு கட்டாயம் தங்கத்தில் டாலர் செயின், அதுவும் தாமரை பூ போட்ட டாலர் செயினை சீதனமாக கொடுப்பாங்க. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் வெள்ளியிலோ, வசதி இருந்தால் தங்கத்திலோ செய்து இதை கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர ஆடி சனிக்கிழமை வழிபாடு

பெண்கள் இந்த டாலரை அணிந்து கொள்ளும் போது அவர்களுக்கு, அந்த வீட்டை நிர்வகிக்கும் திறமையும் அதிகரிக்கும். சிக்கனமாக குடும்பத்தை நடத்தி, குடும்பத்தில் செல்வ செழிப்பை உயர்த்தக்கூடிய ஆற்றலும் அவர்களுக்கு வந்து விடும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -