
ஒரு மனிதனுக்கு வாழ்வில் மிகவும் அவசியமானவை செல்வம் வளம் மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையாகும். ஆனால் பலருக்கும் இந்த இரண்டும் சரிவர அமையாமல் போய்விடுகிறது. இதற்கு ஜாதகரீதியான கிரக தோஷங்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஜாதக தோஷங்கள் காரணமாக திருமண வாழ்க்கை அமையப் பெறாமல் அவதியுறும் நபர்கள் சென்று பரிகாரம் செய்யக்கூடிய ஒரு தளமாக கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் – வீர நாராயண பெருமாள் திருக்கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் செய்யப்படும் கொடுமுடி பரிகாரம் என்றால் என்ன என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கொங்கு மண்டலத்தில் மிக முக்கியமான பரிகார தல கோயிலாக திகழ்கிறது கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் – வீரநாராயண பெருமாள் திருக்கோயில். கர்நாடகத்தில் பிறக்கின்ற காவிரி கொங்கு மண்டலத்தின் வழியாக பாய்ந்து இக்கோயிலின் ஒரு திருப்பம் கொள்வதால், வாழ்வில் வாழ்வில் ஏற்றமிகு திருப்பம் ஏற்பட இக்கோயிலின் அருகே ஓடுகின்ற காவிரி நதிகள் நீராடி அருள்மிகு மகுடேஸ்வரர் – வீர நாராயண பெருமாள் ஆகியோரை வழிபாட வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வர வீர நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு பெரும்பாலானோர் தங்களின் திருமணம் தோஷங்கள் நீங்கி, திருமணம் நல்ல முறையில் நடைபெற பரிகாரம் செய்ய வருகின்றனர். ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்கள் நீங்க மட்டுமல்லாமல் வாழ்வில் நல்ல நிலையை அடைய விரும்புவார்களும். இந்த கொடுமுடி திருக்கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து சிறப்படையலாம் என இங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.
கொடுமுடி கோயில் பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் பரிகாரம் செய்வதற்கு முந்தினமே கோயில் இருக்கின்ற பகுதிக்கு வந்து இரவு தங்க வேண்டும். பிறகு கோயில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தாங்கள் செய்ய விருப்ப பரிகாரத்துக்குரிய கட்டணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். ரசீதைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு கோயில் நிர்வாகிகளே பரிகார பூஜை செய்யும் வேதியர்களை அமர்த்தி கொடுப்பார்கள்.
எனினும் பரிகார பூஜை கூறிய பூஜை பொருட்கள் மற்றும் வேதியர்களுக்குரிய கட்டணத்தை பரிகார பூஜை செய்யும் பக்தர்களே கொடுக்க வேண்டியிருக்கும். பரிகார பூஜை ரசிது பெற்றவர்கள் கோயிலுக்கு வெளியே நதிக்கரை ஓரகம் இருக்கின்ற பரிகாரம் செய்யும் மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தாங்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகளுடன், அருகே ஓடுகின்ற காவிரி நதிக்கரையில் 3 முறை தலைமுழுகி எழுந்த பிறகு, பழைய ஆடைகளை களைந்து, புத்தாடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு பூஜை செய்ய அமர்த்தப்பட்ட வேதியர்கள் அறிவுரைபடி முறைப்படி கொடுமுடி பூஜை பரிகாரங்களை செய்ய வேண்டும் பூஜை பரிகாரம் செய்து முடித்ததும், கோயிலுக்குள் சென்று மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சந்திர தோஷ பரிகாரம்
மேற்சொன்ன படி கொடுமுடி பூஜை பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்கள் நீங்கி, வாழ்வில் ஒரு நல்ல திருப்பம் ஏற்படும் என்பது இந்த கொடுமுடி பூஜை பரிகாரம் முறைப்படி செய்து பலன் பெற்றவர்களின் கருத்தாக உள்ளது.