சந்திர தோஷ பரிகாரம்

- Advertisement -

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த வருகின்ற நவக்கிரக நாயகன் சந்திர பகவான் ஆவார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது தாயார், மனநிலை, வெளிநாட்டு பயணம் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொண்ட கிரகமாக சந்திரன் திகழ்கிறார். ஜாதகத்தில் சந்திர கிரகம் என்பது பாதகமான இடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ, அந்த நபருக்கு சந்திர கிரக தோஷம் ஏற்படுகிறது. சந்திர கிரக தோஷத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் நன்மைகள் அதிகம் பெற செய்ய வேண்டிய சந்திரதோஷ பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திர தோஷம் நீங்க பரிகாரம்

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற சந்திர கிரக தோஷம் நீங்குவதற்கு சிறந்த பரிகார தலங்களாக திகழ்வது திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயில் மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற திங்களூர் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்களாகும். சந்திர தோஷம் நீங்கி வாழ்வில் சிறப்பான பலன்கள் கிடைக்க திங்கட்கிழமையில் பௌர்ணமி வருகின்ற தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்ததும் பௌர்ணமி தின இரவு முழுவதும் திருமலையிலேயே தங்கி மறுநாள் வீடு திரும்ப வேண்டும்.

- Advertisement -

திங்களூர் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கு ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்திலோ அல்லது அஸ்தம், ரோகிணி, திருவோணம் ஆகிய சந்திர பகவானுக்குரிய ஏதேனும் ஒரு நட்சத்திர தினத்தில் சென்று சந்திர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி மேற்சொன்ன இரண்டு கோயில்களுக்கும் சென்று வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் சந்திர கிரக தோஷத்தால் பாதகங்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.

திங்கட்கிழமைகள் தோறும் சிவபெருமான் கோயிலில், சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பசும்பால், தயிர், பசு நெய் போன்றவற்றை தானம் கொடுப்பது சந்திர கிரக தோஷ பாதிப்புகளை குறைக்கும். மேலும் திங்கட்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வதாலும் சந்திர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். கோயில் குலத்தில் இருக்கின்ற மீன்களுக்கு அரிசி மாவினால் செய்யப்பட்ட உருண்டைகள், அரிசி பொறி ஆகியவற்றை உணவாக இடுவதும் சந்திர சந்திர தோஷத்தை குறைப்பதற்குரிய ஒரு சிறந்த தாந்திரீக பரிகாரமாக உள்ளது.

- Advertisement -

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சந்திர பகவான் என்பவர் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகத்துவம் கொண்டவராக திகழ்கிறார். எனவே தினந்தோறும் காலையில் எழுந்ததும் தங்களின் தாயாரின் காலை தொட்டு ஆசிகளை பெறுபவர்களுக்கு சந்திர தோஷ பாதிப்புகள் ஏற்படாது. ஏழைக் குழந்தைகளுக்கு பால் வாங்கி தருவதாலும் ஜாதகத்தில் இருக்கின்ற சந்திரகிரக தோஷ பாதிப்பு குறையும்.

இதையும் படிக்கலாமே: கர்ம பரிகாரம்

தேய்பிறை காலத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு வெள்ளியால் ஆன ஏதேனும் ஒரு பாத்திரத்தை தானமாக கொடுக்க வேண்டும். சந்திர காந்தக்கல், முத்து போன்ற நவரத்தினங்களில் ஏதேனும் ஒன்றை ஒரு வெள்ளிலான மோதிரத்தில் பதித்து, ஒரு வளர்பிறை திங்கட்கிழமையில் உங்கள் இடது கையின் மோதிர விரலில் அணிந்து கொள்வதும் சந்திர கிரக தோஷத்தை போக்குவதற்குரிய சிறந்த பரிகாரமாக உள்ளது.

- Advertisement -