- Advertisement -

கொடுத்த கடனை திரும்ப பெற வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக பல முயற்சிகளை செய்தும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் கொடுத்த பணம் இனிமேல் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்று மனம் நொந்து போய் இருப்பவர்களும் தங்களுக்குரிய இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு யாருமே இல்லையே என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த ஒரு தீபத்தை தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் ஆறு நாட்கள் ஏற்றினால் போதும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும்.இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் பஞ்சபூதங்களின் தத்துவமே காரணமாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட பஞ்சபூதங்களை ஈர்ப்பதற்கு உதவக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் தீப வழிபாடு. எந்த ஒரு வீட்டில் தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது அந்த வீட்டில் பஞ்சபூதங்களின் அருள் என்பது பரிபூரணமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அங்கு தெய்வீக நடமாட்டம் ஏற்படும். எந்தவித எதிர்மறை ஆற்றல்களுக்கும் வழி இல்லாமல் போய்விடும்.

- Advertisement -

அப்படிப்பட்ட பஞ்சபூதங்களிடம் நம்மிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி நம்மிடமே பணத்தை கொடுப்பதற்காக செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த வழிபாட்டை அமாவாசை கழித்த மறுநாளோ அல்லது ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்களோ ஏற்ற வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு வெள்ளை துணி வேண்டும். அடுத்ததாக சிறிது மஞ்சள் வேண்டும். அடுத்ததாக மிகவும் முக்கியமான ஒன்றாக எலுமிச்சம் பழ எண்ணெய் வேண்டும். இதை ஆங்கிலத்தில் லெமன் எஸென்சியல் ஆயில் என்று கூறுவோம். இது பரவலாக ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும். அடுத்ததாக தீபம் ஏற்றுவதற்கு பஞ்சத்திரி வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சளை போட்டு அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி உங்களுடைய மோதிர விரலால் அந்த மஞ்சளை தொட்டு வெள்ளை துணியில் யார் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டுமோ அந்த விவரத்தை எழுத வேண்டும். இதை வீட்டிற்கு வெளியே அமர்ந்துதான் செய்ய வேண்டும். ஏனென்றால் வீட்டிற்கு வெளியே பஞ்சபூதங்களை விரைவிலேயே ஈர்க்க முடியும் என்பதால் தான்.

இவ்வாறு எழுதி முடித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த மஞ்சள் நன்றாக காய்ந்த பிறகு அதை நிறைவாசலுக்கு முன்பாக வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் இந்த எலுமிச்சம் பழ எண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்றி விரைவிலேயே கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தீபமானது வடக்கு, கிழக்கு, மேற்கு பார்த்தவாறு எறியலாம். அதேபோல் இந்த தீபம் அரை மணி நேரம் எரிந்தால் போதும். பிறகு அந்த தீபம் தானாகவே மலை ஏற வேண்டும். இவ்வாறு தீபம் மலையேறிய பிறகு அந்த விளக்கையும் வெள்ளை துணையையும் எடுத்து வீட்டிற்குள் வந்து வைத்து விட வேண்டும். மறுநாளும் இதே போல் முதல் நாள் எந்த நேரத்தில் ஏற்றினோமோ அதே நேரத்தில் அதே வெள்ளைத் துணியை வைத்து அகல் விளக்கை சுத்தம் செய்து புதிதாக எண்ணெய் திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் செய்துவர இந்த பஞ்சபூதத்தின் உதவியாலும் பிரபஞ்சத்தின் உதவியாலும் நம்மிடம் யார் பணம் வாங்கினார்களோ அவர்களின் மனம் மாறி விரைவிலேயே அந்த பணத்தை திரும்ப வந்து கொடுத்துவிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: ஆனி உத்திரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கொடுத்த கடன் திரும்ப வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -