- Advertisement -

காலையில் வாசல் தெளித்து கோலம் போட வில்லை என்றாலும் பரவாயில்லை! மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வருகை தர, இதை மட்டும் செய்யுங்க போதும்.

காலையில் வாசல் தெளித்து கோலம் போட வில்லை என்றாலும், மகாலட்சுமி வீட்டிற்கு வருகை தந்து விடுவாள்! என்ற நினைப்பில் எந்த பெண்மணியும், இந்தப் பதிவினைப் படித்து விட்டு அலட்சியமாக வாசலில் கோலம் போடாமல் இருக்கவே கூடாது. நிச்சயமாக காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டே ஆக வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும் கோலம் போட முடியாத சூழ்நிலை என்பது நிறையவே உள்ளது. கோலம் போட முடியாத சூழ்நிலையில் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் வீடுகளில் அமாவாசை தினத்தில் கோலம் போடும் பழக்கத்தை வைத்து இருக்க மாட்டார்கள். சில சமயங்களில் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில், பெண்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போட முடியாது. இந்த சமயங்களில் என்ன செய்யலாம்?

ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து, அந்த தண்ணீரை வாசல் தெளித்து விட வேண்டும். அதன்பின்பு கொஞ்சமாக பச்சரிசி மாவில் வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து அந்த கலவையை உங்களுடைய நில வாசலுக்கு வெளிப்பக்கத்தில் கோலம் போடும் இடத்தில் இரண்டு பக்கத்திலும் தூவி விட வேண்டும். அதாவது கோலம் போடும் இடத்தில் நடுவே இதனை கொட்டி வைத்து விடவேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள், கோலம் போட முடியவில்லை என்ற சூழ்நிலை வரும்போது பெண்கள் கையாலேயும் இதை செய்யலாம். வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில், ஆண்களும் இதை செய்யலாம் தவறு கிடையாது.

- Advertisement -

அந்த காலத்தில் கோலம் போடுவதை லட்சுமி கடாட்சம் என்று சொன்னதற்கு காரணமே, நம் வீட்டிற்குள் வரும் ஈ எறும்பு கூட பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு காலையில் நீங்கள் இந்த அரிசிமாவு வெல்லம் கலந்த உணவை அளித்து விட்டால், உங்கள் நில வாசப்படியில் கோலம் போட்டதை விட பல மடங்கு புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கோலம் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே இதை செய்ய வேண்டும். இதற்காக கோலமே போடாமல் தினசரி வெல்லம் பச்சரிசி கலந்த மாவை தூவிவிட்டு, சும்மாவே இருக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதேபோல் நில வாசலில் கோலம் போடும்போது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம். வாசலில் கோலம் போட்டுவிட்டு தேவைப்பட்டால் பச்சரிசியையும் மாவையும் சர்க்கரையையும் கலந்து வாசலில் தூவி விடலாம்.

- Advertisement -

கோலம் போடாத வீடு, தீபம் ஏற்றப்படாத வீடு, என்றாலே அந்த வீடு நிச்சயம் வறுமை நிறைந்த வீடாகத் தான் இருக்கும். கஷ்டங்கள் நிறைந்த வீடாகத் தான் இருக்கும். அந்த இடத்தில் மகாலட்சுமி நிச்சயமாக தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு துக்க காரியம் நடந்த வீட்டில் தான் கோலமும் போடாமல், தீபம் ஏற்றாமல் இருக்கும்.

ஃபிளாட்டில் வசிப்பவர்கள், மாடி வீட்டில் வசிப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் உங்களுடைய வீட்டு நிலை வாசல் படிக்கு வெளிப்பக்கத்தில் கொஞ்சமாக இப்படி பச்சரிசி வெல்லம் கலந்த கலவையை தூவி விட்டு விடுங்கள். கோலம் போட வில்லை என்பதனால், எந்த வருத்தமும் இனி உங்களுக்கு தேவையில்லை. அந்த கோலம் போட்டதற்கு ஈடாக நீங்கள் இந்த காரியத்தை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருப்பதோடு சேர்த்து, உங்களுக்கு புண்ணியமும் சேரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -