- Advertisement -

27-04-2024 சனிக்கிழமையோடு வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எவ்வளவு தான் உழைத்தாலும், விதியின் பயனால் தடைகள் தானாக வந்து கொண்டே தான் இருக்கிறது. பலமுறை முயற்சி செய்து, ஒரு முறையாவது வெற்றி அடைந்தால் தானே முயற்சி செய்யவும் ஆர்வம் வரும். பல முறை முயற்சி செய்தும், தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட வராது.

உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடையாக பல பிரச்சினைகள் வருகிறதா. நாளைய தினம் விநாயகரை மறக்காமல் இந்த முறைப்படி கும்பிடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் சங்கடங்கள் எல்லாம் விலகும்.

- Advertisement -

சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே சுத்தபத்தமாக எழுந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதத்தை தொடங்குங்கள். வழக்கம் போல சொல்வது தான். விரதம் இருப்பது என்பது அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்தது. உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பிடாமல் வேலை செய்ய முடியாது, என்பவர்கள் எல்லாம் வயிறு நிரம்ப சாப்பிட்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

எந்த தவறும் கிடையாது. பூஜை அறையில் விநாயகர் திருவுருவப்படத்திற்கு அருகம்புல் வைத்து விடுங்கள். நாளை மாலை 6 மணி அளவில் இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்ய வேண்டும். ஒரு சுத்தமான எச்சில் படாத பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

அந்தத் தண்ணீரில் கொஞ்சம் அருகம்புல் போட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். விநாயகருக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து வையுங்கள். கொழுக்கட்டை செய்து வைப்பது சிறப்பான பலனை தரும். முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழம் வைத்தாலும் சரிதான். பிறகு ஒரு கிண்ணத்தில் சுத்தமான மஞ்சள் எடுத்துக் கொள்ளவும்.

அந்த மஞ்சளை எடுத்து நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அருகம்புல் தண்ணீரில் போட வேண்டும். ஒவ்வொரு சிட்டிகை மஞ்சளாக எடுத்து போடுங்க. ஒவ்வொரு முறை மஞ்சளை எடுத்து அந்த அருகம்புல் தண்ணீரில் போடும்போதும் ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். குங்கும அர்ச்சனை போல இது மஞ்சள் அர்ச்சனை.

- Advertisement -

அருகம்புல் தண்ணீரில் போடணும் இந்த மஞ்சளை. இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு பூஜையை நிறைவு செய்து கொண்டு தீப தூப ஆராத்தி காண்பியுங்கள். பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அந்த பாத்திரத்தில் இருக்கும் அருகம்புல் மஞ்சள் சேர்த்த தண்ணீர் அப்படியே இருக்கட்டும்.

நாளை மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து விநாயகரை 3 முறை வளம் வந்து, 3 முறை தோப்புக்கரணம் போட்டு, விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடையுங்கள். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் இந்த தேங்காய் உடைவது போல தூள் தூளாக சுக்கு நூறாக உடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிறகு வீடு திரும்பியவர்கள் வழக்கம் போல உங்களுடைய வேலையை செய்யலாம். மறுநாள் காலை அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று எழுந்து பூஜை அறையில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா தண்ணீர் அதிலிருந்து கொஞ்சமாக எடுத்து நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து குளித்து விடுங்கள். குளித்துவிட்டு வந்து மீதம் இருக்கும் அந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து உங்கள் வீடு முழுவதும் மூலை முடுக்குகளில் தெளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க ராகுகால பரிகாரம்

இந்த மஞ்சள் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டால் உங்கள் வீட்டில் காரிய தடை விலகும் நீங்கள் மேற்கொள்ளக் கூடிய முயற்சிகள் வெற்றி அடையும். வீட்டில் இருந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும். விநாயகரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். எளிமையான ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை நாளைய தினம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -