
எல்லோருக்கும் தான் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து செல்வந்தர்களாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த கனவை, எல்லாராலும் நிஜமாக்க முடியாது. ஆனால், அதற்கான முயற்சிகளை எல்லாரும் மேற்கொள்ள முடியும் அல்லவா. உங்களுடைய பணம் சம்பாதிக்கும் முயற்சிகளோடு, இந்த பரிகாரம் சேரும்போது, மேற்கொள்ளும் முயற்சிகள் சீக்கிரம் வெற்றியடையும்.
சீக்கிரம் வாழ்க்கையில் ஜெயிக்க தொடங்கி விடுவீர்கள். ஜெயிக்க ஜெயிக்க பணம் தானாக உங்களைத் தேடி வரும். குபேரரின் அருள் பெற எல்லோராலும் செய்ய தகுந்த ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் கொட்டை பாக்கு. இதை கலிப்பாக்கு என்றும் சில பேர் சொல்லுவார்கள். 1 ரூபாய் நாணயம் தேவை. வெண்கலத்தால் செய்யப்பட்ட கிண்ணம் அல்லது பித்தளை கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். சின்னதாக டம்ளர் எடுத்துக் கொண்டால் கூட தவறு கிடையாது. இந்த வெண்கல பாத்திரத்தை பூஜை அறையில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து குபேரரை மனதார பிரார்த்தனை செய்து, குபேரர் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இரண்டு கொட்டை பாக்கை எடுத்து இந்த கிண்ணத்தில் போட வேண்டும். கொட்டைப்பாக்குகளை அந்த கிண்ணத்தில் போடும்போது ஒரு சத்தம் எழும்பும் அல்லவா.
அந்த சத்தத்தோடு இரண்டு கொட்டை பாக்குகளை போடுங்கள். பிறகு 1 ரூபாய் நாணயம், அந்த நாணயத்தையும் அந்த பாத்திரத்தில் படும்படி, சத்தம் கேட்கும் படி போட வேண்டும். இந்த இரண்டு சத்தமும் குபேரருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இதே போல தினமும் பூஜை அறையில் காலையில் இந்த சத்தத்தை எழுப்பி குபேரரை அழைத்து செல்வவலம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால் உங்கள் வேண்டுதல் பலிக்கும். தினமும் இதை செய்ய முடியாது என்பவர்கள் வியாழக்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் எழுப்பும் இந்த சத்தத்துக்கு குபேரர் விரும்பி வந்து உங்கள் பூஜை அறையில் அமர்ந்து கொள்வார் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
சரி வெண்கல கிண்ணம் நிரம்பி விட்டால் என்ன செய்வது அதற்கு உள்ளே இருக்கும் பாக்கை அப்படியே எடுத்து ஓடுகின்ற நதிநீரில் விட்டு விடுங்கள். ஏரிகள் குளங்கள் கிணற்றில் கூட இந்த பாகை போடலாம். நாணயங்களை உங்கள் வீட்டு சுப செலவுக்காக பயன்படுத்துங்கள். பூஜைக்கு கற்பூரம் வாங்குவது, வெற்றிலை பாக்கு, சுவாமிக்கு பூ வாங்க, இப்படி சுப செலவுக்கு அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: 30-05-2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தொடர்ந்து 48 நாள் இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழும். தீராத கடன் பிரச்சனை தீர்ந்திருக்கும், வராத பணம் கைக்கு வந்து சேர்ந்திருக்கும், தீராத செத்துப் பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட ஒரு முடிவு கட்டலாம், ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.