
ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொருவருடைய முகமும் உடலமைப்பும் மாறுபடும். அந்த வகையில் எவ்வளவு வயதானாலும் இளமையாகவும் பொலிவுடன் திகழ்ந்தவர்கள் கொரியர்கள். இவர்கள் இப்படி திகழ்வதற்கு அவர்களுடைய சருமத்தை பராமரிக்கும் முறையும் குறிப்பிடத்தக்கதாக திகழ்கிறது. அந்த முறையோடு அவர்கள் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம் என்றும் இளமையாக திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட கொரியர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஃபேஸ் மாஸ்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் இந்த ஃபேஸ் மாஸ்கை நாம் செய்யப் போகிறோம். அதனால் இதற்கு பெரிதும் பொருட்செலவோ அல்லது நேர செலவு ஏற்படாது. எளிமையான முறையில் வீட்டிலேயே ஐந்து நிமிடத்தில் இந்த ஃபேஸ் மாஸ்கை தயார் செய்துவிட முடியும். தினமும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் பளபளப்பாகவும் பொலிவோடும் திகழ ஆரம்பிக்கும்.
இந்த ஃபேஸ் மாஸ்கிற்கு மூன்றே மூன்று பொருட்கள் தான் தேவைப்படும். ஒன்று அரிசி மாவு, மற்றொன்று தேன், கடைசியாக இருக்கக்கூடியது பால். இவை மூன்றுமே நம்முடைய சருமத்திற்கு மிகவும் உகந்ததாக திகழ்கிறது. அரிசி மாவை நம்முடைய சருமத்திற்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகள், கருத்திட்டுகள், கருவளையம் போன்றவை நீங்கும். சூரிய ஒளிக் கதிர்களால் ஏற்பட்ட கருமை முற்றிலும் நீங்கும். தேன் நம்முடைய சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தந்து என்றும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. பால் நம்முடைய இறந்த செல்களை நீக்கி பொலிவை தரக்கூடியதாக திகழ்கிறது.
இந்த மூன்று பொருட்களையும் நாம் தனித்தனியாக உபயோகப்படுத்தினாலே நம்முடைய முகத்தில் நல்ல மாற்றத்தை உணர முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நாம் பயன்படுத்தும் பொழுது நம்மால் நம்ப முடியாத அளவிற்கு நமக்கு பலன் கிடைக்கும். இதற்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இது மாஸ்க் போடும் அளவிற்கு வரவேண்டும் அதனால் அதற்கு தேவையான அளவு பாலை ஊற்றி நன்றாக கலந்து மாஸ்க் பதத்திற்கு கொண்டு வந்து விடுங்கள்.
இப்பொழுது இதை அப்படியே எடுத்து உங்களுடைய முகத்தில் நன்றாக தடவி 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்திருங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவுங்கள் .அவ்வாறு கழுவும் பொழுது முதலில் சிறிதளவு மட்டும் தண்ணீரை ஊற்றி உங்கள் கைகளை பயன்படுத்தி நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்து பிறகு தண்ணீரை நன்றாக ஊற்றி கழுவ வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக நாம் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகள், கருவளையம், கரும்புள்ளிகள், சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமை, முகசுருக்கம் போன்றவை அனைத்தும் நீங்குவதோடு முகம் பொலிவுடன் பிரகாசமாகவும், இளமையாகவும் திகழும்.
இதையும் படிக்கலாமே:தலைமுடி மிருதுவாக இருக்க டிப்ஸ்
தினமும் தொடர்ச்சியாக நாம் இந்த ஃபேஸ் மாஸ்கை இரவில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களும், கருமையும், சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவுடன், பிரகாசமாகவும், இளமையாகவும் திகழும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.