ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி இருக்கும். சிலருக்கு வறண்ட கேசம், சிலருக்கு சுருண்ட கேசமும், சிலருக்கு மென்மையான கேசமும் இருக்கும். இப்படி விதவிதமான தலை முடியை வைத்திருக்கும் பெண்கள் பலருக்கும், விருப்பமானது என்னவோ நேர்த்தியான, நேராக அலைபாயும் சில்க்கியான கூந்தல் தான்! இதற்காக பல்லாயிரக்கணத்தில் செலவு செய்யவும் செய்வார்கள். வீட்டிலேயே பார்லர் போகாமல் எப்படி ஸ்மூத் அண்ட் சில்கியான தலைமுடியை கொண்டு வருவது? என்னும் அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
நம் தலை முடி மிருதுவாகவும், நேர்த்தியாகவும் இருப்பதற்கு தயிர் ஒரு சிறந்த பொருளாக இருக்கிறது. தயிரில் இருக்கும் இயற்கையான மென்மை தன்மை நம்முடைய கூந்தலில் இருக்கக் கூடிய அழுக்குகளை அகற்றி, சுத்தம் செய்து கேசத்தை உள்ளிருந்தே மென்மையாக்குகிறது. ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும்.
பெரிய கற்றாழை மடல் ஒன்றை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு அதனுள் இருக்கும் ஜெல் போன்ற பகுதியை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்து சில முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மிக்ஸியில் அல்லது கைகளில் அரைத்து கூழ் போல செய்து கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். தயிருடன், இதனையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் கடைசியாக வறண்ட கேசத்தை மென்மையாக்குவதற்கு ரெண்டு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு பத்து நிமிடம் நன்கு கலந்து நைசாக பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்ட்டை தலைக்கு குளிக்க செல்லும் முன்னர் ஒரு பத்து நிமிடத்திற்கு மட்டும் மசாஜ் செய்து ஸ்கேல்ப் பகுதியில் இருந்து தலைமுடியின் நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவிக் கொள்ளுங்கள்.
இதனை தடவிய பிறகு 10 நிமிடம் ஊற விட வேண்டும். நன்கு காய்ந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீரில் உங்கள் தலைமுடியை அலசி சுத்தம் செய்யுங்கள். ஷாம்பூ பயன்படுத்தும் பொழுது நேரடியாக பயன்படுத்தாமல், சிறிது தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். சீயக்காய் பயன்படுத்துபவர்கள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீருடன் கலந்து தேய்த்து தலைமுடியை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் உங்களுடைய தலைமுடியா இது? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடியானது நேராக நீண்டு ரொம்பவும் சில்க்கியாகவும், ஸ்மூத்தாகவும் மிருது தன்மையுடன் மாறிவிடும்.
இதையும் படிக்கலாமே:
பீரோவில் வைக்கக் கூடாத பொருள்
இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ட்ரை செய்து பாருங்கள், வறண்டு போன உங்களுடைய கூந்தலுக்கு இயற்கையான ஈரப்பதம் கிடைத்து நன்கு செழித்து வளரவும் செய்யும். முடி உதிர்தல் தடுக்கப்படும். மேலும் பொடுகு தொந்தரவுகள் இருக்காது. தலையில் அரிப்பு தொந்தரவு இருந்தாலும், அவற்றை இந்த கலவை எளிதாக நீக்கிவிடும். ரொம்பவே எபக்ட்டிவ்வான ரிசல்ட்டை கொடுக்கக் கூடிய இந்த ஹேர் பேக்கை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடித்து போய்விடும்.