- Advertisement -

கோரிக்கையை நிறைவேற்றும் குபேர பிரதோஷ பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலத்தில் பலரும் பிரதோஷம் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். பிரதோஷ நாளன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கமும் பலருக்கும் இருக்கும். பலரும் அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளோடு மற்ற அனைத்து தெய்வங்களின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பிரதோஷம் என்பது குபேரருக்கு உகந்த வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர பிரதோஷ பரிகாரம்

பொதுவாகவே ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் குபேர பூஜை செய்பவர்களுக்கு குபேர பகவானின் அருளால் பண வரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பலரும் அந்த குபேர பூஜையை செய்வார்கள். பூஜை செய்ய இயலாதவர்கள் அன்றைய தினம் குபேரரை நினைத்து வழிபாடு மட்டும் செய்வார்கள். எப்படி இருந்தாலும் வியாழக்கிழமை குபேர பகவானை நாம் மனதார நினைத்தோம் என்றால் அவருடைய அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய வியாழக்கிழமை அன்று பிரதோஷம் வருவதன் மூலம் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய பணவரவை அதிகரிப்பதோடு கோரிக்கைகளையும் நிறைவேற்றும்.

- Advertisement -

குபேர பகவானுக்கு உரிய எண்ணாக கருதப்படுவது ஐந்து. அதனால் குபேர பூஜை செய்யும் பொழுதும் சரி குபேரருக்குரிய பரிகாரத்தை செய்யும் பொழுதும் சரி, நாம் ஐந்து ரூபாய் நாணயத்தை பயன்படுத்துவோம். மேலும் நாணயமும் குபேர பகவானுக்குரியதாகவே கருதப்படுகிறது நாணயத்தால் ஏற்படக்கூடிய சத்தம் குபேரருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அப்படிப்பட்ட சத்தத்தை எழுப்பி குபேர பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது அவர் நம் வீடு தேடி வந்து நம்முடைய வழிபாட்டிற்குரிய பலனை தருவார் என்று கூறப்படுகிறது. அதனால் ஐந்து ரூபாய் நாணயம் என்பது குபேரருக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துதான் வியாழக்கிழமை சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளான இன்று நாம் பரிகாரம் செய்ய போகிறோம்.

இந்த பரிகாரத்தை மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது நமக்கு நேரம் இருக்கிறதோ அப்பொழுது செய்யலாம். இந்த பரிகாரத்தை வீட்டில் இருந்து கொண்டு தான் செய்ய வேண்டும் அல்லது ஆலயத்தில் இருந்து கொண்டு தான் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் இருந்து கொண்டு செய்யலாம். முழு மனதோடு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் சிவபெருமானையும் குபேரையும் மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்தவித தங்கு தடையும் கிடையாது. யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு ஐந்து ரூபாய் நாணயம் வேண்டும். அந்த நாணயத்தை உங்களுடைய வலது கையில் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அல்லது நின்று கொண்டு சிவபெருமானுக்குரிய இந்த ஒரு அற்புதமான திருநாமத்தை முழுமனதோடு கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளோடு மட்டுமல்லாமல் மகாவிஷ்ணுவின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. கையில் ஐந்து ரூபாய் வைத்துக் கொண்டு செய்வதால் குபேரரின் அருளையும் நம்மால் பெற முடியும். இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 15 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் முழு மனதுடன் கூற வேண்டும் என்பது மட்டுமே தான் இதில் ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த மந்திரமானது “ஹரி நமசிவாய”

இந்த மந்திரத்தை முழுமனதோடு 15 நிமிடம் கூறி முடித்துவிட்டு உங்களுடைய கோரிக்கை என்னவோ அதை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து சிவபெருமானிடம் கூறுவது போலவே கூற வேண்டும். பிறகு கையில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாயை ஒரு பேப்பரில் மடித்து ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோரிக்கை எப்பொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய சிவாலய உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பணக்கஷ்டம் தீர வெற்றிலை தீர்த்தம்

எளிமையான இந்த ஐந்து ரூபாய் பரிகாரத்தை குபேர பிரதோஷமான இன்று இரவுக்குள் முழு மனதோடு செய்பவர்களுக்கு அவர்கள் வைத்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -