- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த சின்ன சின்ன விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். கோவில் மிளகு வடையை அதே ருசியில் இனி நீங்களும் உங்கள் வீட்டில் சுலபமாக செய்து விடலாம்.

- Advertisement -

கோவில்களில் தரும் பிரசாதமான இந்த மிளகு வடை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அந்த வடையை வீட்டில் அதே ருசியுடன் மணத்துடன் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் சாதாரணமாக செய்யும் வடையை விடவே இதன் செய்முறை மிகவும் சுலபம் தான். இதில் சேர்க்கும் பொருட்கள் அளவு செய்யும் தன்மையும் மட்டும் தெரிந்தால் போதும் அதே போல சுவையான வடையை நாம் வீட்டிலும் செய்து விடலாம். வாங்க இப்போது வடை சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.

கோவில் மிளகு வடை செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு முழு உளுந்து – 1 கப், – மிளகு 2 டேபிள் ஸ்பூன், பச்சரிசி மாவு – 1டேபிள் ஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

கோவில் மிளகு வடை செய்முறை விளக்கம்
இந்த வடைக்கு கருப்பு முழு உளுந்தை 6 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். சாதாரண வெள்ளை உளுந்து என்றால் ஒரு மணி நேரம் ஊறினாலே போதும். இந்த உளுந்து அதிக நேரம் ஊற வேண்டும் அப்போது தான் அதன் மேல் இருக்கும் தோல் உறிந்து வரும். வடையின் பக்குவமும் சரியாக இருக்கும். 6 மணி நேரம் ஊறிய உளுந்தை இரண்டு, மூன்று முறை நன்றாக தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். அப்போது அதிலிருந்து கருப்பு தோள்கள் வரும். முழுவதுமாக தோல்களை நீக்கி விடக் கூடாது. பாதி அளவு வந்தால் போதும் கொஞ்சம் தோலுடன் இருந்தால் தான் அந்த வடை கொஞ்சம் கெட்டித் தன்மையாக இருக்கும். இல்லையென்றால் சாதாரண உளுந்த வடை போல மெத்தென்றும் ஆகி விடும்.

இப்போது கழுவி எடுத்த உளுந்தை மிக்ஸியில் சேர்த்து கொள்ளுங்கள். அத்துடன் மிளகு உப்பு இரண்டையும் சேர்த்து ஒன்றாகவே அரைத்துக் கொள்ளலாம். இந்த உளுந்து ஒரு 80 சதவீதம் அறைந்தால் மட்டும் போதும். ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் உளுந்துகள் தென்பட வேண்டும். அப்போது தான் அந்த கோவில் வடையை போலவே இருக்கும்.

- Advertisement -

இப்போது அரைத்து உளுந்தை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இந்த நேரத்தில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானவுடன் இந்த மாவை நீங்கள் சாதாரண உளுந்த வடைக்கு எடுப்பது போல் எடுத்து அப்படியே தட்ட முடியாது. மாவு கெட்டியாக இருக்கும் லேசாக தண்ணீர் தெளித்து ஒரு வாழை இலையில் (வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தலாம்) வடையை தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து விடுங்கள். கோவில் மிளகு வடை தயார்.

இதையும் படிக்கலாமே: வேர்க்கடலையை வைச்சு நல்ல காரசாரமான இந்த சட்னியை அரைச்சு, சுட சுட இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். அப்புறம் நீங்களும் இதோட டேஸ்ட்டுக்கு அடிமை ஆகிடுவீங்க

கோவிலில் தரும் மிளகு வடை ருசி அப்படியே இந்த வடையிலும் இருக்கும் இந்த முறையில் செய்து பாருங்கள் இனி கோவில் பிரசாதத்தை வீட்டிலும் சுலபமாக செய்துவிடலாம்.

- Advertisement -