வேர்க்கடலையை வைச்சு நல்ல காரசாரமான இந்த சட்னியை அரைச்சு, சுட சுட இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். அப்புறம் நீங்களும் இதோட டேஸ்ட்டுக்கு அடிமை ஆகிடுவீங்க

- Advertisement -

இந்த சமையல் குறிப்பு பதிவில் இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம் என அனைத்து டிபன்களுக்கும் ஏற்ற வகையில் ஒரு வேர்க்கடலை கார சட்னி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். வேர்க்கடலை சட்னி என்றவுடன் இதில் நாம் எப்போதும் செய்வது தானே என்று உங்களுக்கு தோன்றலாம், ஆனால் எப்போதும் நாம் செய்யும் வேர்கடலை சட்னி போல் இது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் அதிக ருசியுடன் இருக்கும் இந்த சட்னியை எப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்.

வேர்க்கடலை கார சட்னிக்கு தேவையான பொருட்கள்:
வேர்கடலை – 1 கப், வெங்காயம் – 2,காஷ்மீரி மிளகாய் – 3, புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, கடுகு – 1டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு -4 பல், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -1 ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

வேர்க்கடலை கார சட்னி செய்முறை:
இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் வேர்க்கடலையை சேர்த்து லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதே பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்த பிறகு நாலு பூண்டு பல்லையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்த பிறகு, காய்ந்த மிளகாய், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இவை எல்லாம் வதங்கும்போது அடுப்பை லோ ஃபிளேமில் இருக்க வேண்டும். கடைசியாக கொஞ்சம் புளி சேர்த்து ஒரு முறை வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற விடுங்கள்.

இவை எல்லாம் ஆறி பிறகு இத்துடன் வேர்க்கடலை, உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு தாளிப்பு கரண்டி வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்தவுடன், ஒரு வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி இதில் இதில் சேர்த்து வதக்கி இருக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த மசாலா அரைச்சு போட்டு பொட்டேட்டோ பொடிமாஸ் செஞ்சி பாருங்க. நீங்க செய்ற பொடிமாஸின் வாசம் அடுத்த வீதி வரை வீசும்.

கடைசியாக இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து சுட சுட இட்லி வைத்து அதன் மேல் இந்த சட்னி ஊத்தி சாப்பிட்டு பாருங்கள் சொல்லுவதை விட இப்படி சாப்பிட்டு அளவு எடுத்து பாருங்கள் நான் ருசி பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -