- Advertisement -

கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஆவணி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி தான் கோகுலாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. இன்றைய நாளை கிருஷ்ணரின் பிறந்த நாளாக உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அதிலும் தமிழ்நாட்டில் இந்த கிருஷ்ண ஜெயந்தி ஆனது வெகு விமர்சையான ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. பொதுவாக பெருமாள் வழிபாடு செய்பவர்கள் இந்த கிருஷ்ண ஜெயந்தியை முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்ய முடியாதவர்களும் கிருஷ்ணரின் அருளை பரிபூரணமாக பெற ஒரு மந்திரம் சொன்னால் மட்டும் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணனின் அருளை பெற மந்திரம்

குழந்தை அவதாரமான கிருஷ்ணரை வழிபாடு செய்வதை ஒரு பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்த வழிபாட்டை குழந்தை இல்லாதவர்களும் மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் கிருஷ்ணரே குழந்தையாக பிறப்பார் என்பதும், குழந்தை உள்ளோர் வீட்டில் இந்த கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்யும் பொழுது குழந்தைகள் நல்ல சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதும் ஐதீகம்.

- Advertisement -

ஆகையால் தான் இந்த வழிபாடு செய்ய குழந்தைகளுக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் செய்து வைப்பதுடன் கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைந்து கிருஷ்ணரை வீட்டில் வரவேற்பார்கள். அது மட்டும் இன்றி வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு மகிழ்ந்து கொண்டாடுவார்கள். அப்படியான இந்த கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை அனைவரும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. சிலரால் செய்ய முடியாத சந்தர்ப்பங்களும் உருவாகும். இன்னும் சிலருக்கோ இந்த வழிபாடு செய்யும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம் எப்படி ஆயினும் கிருஷ்ணரின் அருள் கிடைக்க வேண்டும் அதுதானே இந்த வழிபாட்டின் முக்கிய சாராம்சம்.

அப்படி இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் செய்பவர்கள் அனைவருமே இன்றைய தினத்தில் இந்த ஒரு மந்திரத்தை சொன்னாலே கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு முதல் குழந்தைகளின் நலன் இப்படி சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பதிலும் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படியான ஒரு அற்புத மந்திரம் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

மந்திரம்

ஓம் நமோ பகவதே கிருஷ்ண தேவாய நமக

என்ற இந்த மந்திரத்தை இன்றைய தினத்தில் ஒரே ஒருமுறை சொன்னாலே போதும் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதற்கு மேலும் சொல்ல வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாக சொல்லுங்கள். இந்த மந்திரத்தை வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் முன் அமர்ந்து சொன்னாலும் சரி அல்லது ஆலயத்திற்கு சென்று அங்கு அமர்ந்து சொன்னாலும் சரி எந்த விதத்தில் சொன்னாலும் அருள் பரிபூரணமாக கிடைப்பது மட்டும் உறுதி.

அதே போல் இந்த மந்திரத்தை இன்றைய நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் சொல்லலாம் இதற்கென எந்த வரைமுறையும் கிடையாது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்ய முடியாதவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதோடு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒன்றை வாங்கி கொடுங்கள். அது உணவாக இருக்கலாம் ஆடைகளாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் கல்விக்காக பொருளாகவும் இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே:பண வரவு அதிகரிக்க நாளை குளிக்கும் போது சொல்ல வேண்டிய வார்த்தை
குழந்தை அவதாரம் ஆன கிருஷ்ணரை வழிபட குழந்தைகளை ஆராதிப்பதை விட சிறந்த வழி ஏதும் இல்லை என்று சொல்லுவார்கள். அதன்படி இந்த மந்திரத்துடன் உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு உதவியை குழந்தைகளுக்கு செய்து கிருஷ்ணரின் அருளை பரிபூரணமாக பெற்று உங்கள் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்வதற்கான வழியை தேடிக் கொள்ளலாம் என்ற இந்த கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -