- Advertisement -

செல்வ செழிப்பில் சிறந்து விளங்க வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்பவர்கள் குபேரரையும் சேர்த்து வழிபடும் பொழுது குபேர பகவானின் அருளால் விரைவிலேயே வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அப்படி குபேர பகவானை வழிபடும் எளிமையான முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேரரை எளிமையாக வழிபடும் முறை

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். அதே போல் தான் குபேர பகவானும். மகாலட்சுமி தாயாரின் கணவராக திகழக்கூடிய பெருமாளே தன்னுடைய திருமணத்திற்காக குபேரிடம் இருந்துதான் பணத்தை கடனாக வாங்கி இன்றளவும் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று திருப்பதி சம்பந்தப்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு செல்வ செழிப்புடன் இருக்கக்கூடியவராகவும் அனைத்து விதமான செல்வங்களையும் தன்னகத்தை கொண்டவராகவும் திகழ்ந்தவர் தான் குபேர பகவான்.

- Advertisement -

அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய சிறப்பு மிகுந்த கிழமையாக திகழ்வதுதான் வியாழக்கிழமை. அதுவும் மாலை 5 மணிக்கு மேல் தான் குபேரருக்குரிய நேரமாக கருதப்படுகிறது. அதனால் தான் குபேரருக்குரிய பூஜைகளை நாம் வியாழக்கிழமை மாலை நேரத்தில் செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். குபேரரை வசியம் செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கிறது. அவற்றுள் மிகவும் எளிமையாக அனைவராலும் செய்யக்கூடிய ஒரு வழிமுறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

வியாழக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 10:00 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒன்பது நாணயங்கள் வேண்டும். ஒரே அளவில் இருக்கக்கூடிய நாணயமாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை எடுத்து அதில் ஒன்பது நாணயங்களையும் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதற்கு முன்பாக அந்த நாணயங்களை பன்னீரில் சுத்தம் செய்து ஒவ்வொரு நாணயத்திற்கும் சந்தனம் குங்குமம் வைத்து வைக்க வேண்டும். ஒன்றின் மேல் ஒன்றாக வைக்க கூடாது.

- Advertisement -

பிறகு அந்த ஒவ்வொரு நாணயத்திற்கு மேலும் ஏதாவது ஒரு வாசனை மிகுந்த மலரை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து நிறைவேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு நாம் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வடக்கு தான் குபேரருக்குரிய திசையாக கருதப்படுகிறது.

நம்முடைய கையில் வாசனை மிகுந்த மலர்களை வைத்துக் கொண்டு “ஓம் குபேராய வசி வசி” என்னும் மந்திரத்தை 108 முறை கண்களை மூடி மனதார கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு நம்முடைய கையில் இருக்கக்கூடிய மலர்களை அந்த நாணயத்தில் போட்டு விட வேண்டும். அன்று இரவு முழுவதும் அந்த நாணயங்கள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலையில் எப்பொழுதும் போல் விளக்கேற்றி பூஜையெல்லாம் செய்து முடித்த பிறகு இந்த நாணயங்களை எடுத்து உங்களுடைய பணம் சேர்க்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 11 நாட்கள் இந்த நாணயத்தை செலவு செய்யக்கூடாது. பிறகு நாம் எதற்கு வேண்டுமானாலும் இந்த நாணயத்தை செலவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் இந்த முறையில் நாம் குபேரரை நினைத்து வழிபாடு செய்யும்பொழுது குபேரரின் வசியம் நமக்கு ஏற்பட்டு அதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். செல்வ செழிப்பு உயரும்.

இதையும் படிக்கலாமே: வராத பணம் வர வரமிளகாய் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த குபேர வழிபாட்டில் விருப்பம் இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து தங்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரித்துக் கொள்ளலாம்

- Advertisement -