- Advertisement -

குபேர யோகம் பெற பிரதோஷ நேரத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

வியாழக்கிழமை என்பது குருபகவானுக்கு உரிய நாளாக திகழ்கிறது. அதேபோல்தான் வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்கும் உரிய நாளாக திகழ்கிறது. பலரும் வியாழக்கிழமை மாலை நேரத்தில் குபேர பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் குபேரன் அருள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவருக்கு குபேரரின் அருள் கிடைத்துவிட்டால் அவருக்கு செல்வ செழிப்பில் எந்தவித குறையும் இருக்காது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று பிரதோஷம் வருகிறது என்பது கூடுதல் விசேஷம். இந்த பிரதோஷ நாளில் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் குபேர யோகம் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர யோகம் பெற பிரதோஷ தீபம்

அசுரனாகப் பிறந்து சிவபெருமானை மனதார நினைத்து தவமிருந்து வரத்தைப் பெற்றவர் தான் குபேரர். மேலும் இவருக்கு நவநிதிகளையும் சிவபெருமான் அருளினார். செல்வ செழிப்பிற்கு அதிபதியாகவும், நவநிதிகளுக்கு பொறுப்பாகவும் இருக்கக்கூடிய குபேர பகவானுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தும் வரமும் கிடைப்பதற்கு காரணமாக திகழ்ந்தவர் சிவபெருமான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட சிவபெருமானுக்குரிய பிரதோஷம் என்பது குபேரரருக்குரிய வியாழக்கிழமை வருகிறது என்னும் பொழுது அதற்கு கூடுதல் சிறப்பு தானே? அந்த நாளில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் வியாழக்கிழமை குரு ஹோரையில் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏற்ற வேண்டும். முடிந்த அளவிற்கு இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏற்ற முயற்சி செய்யுங்கள். அது குரு பகவான், குபேரர் மற்றும் சிவபெருமான் இவர்கள் மூவரின் அருளையும் பெறுவதற்கு உதவும்.

இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டில் விபூதி அல்லது குங்குமத்தை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் இவை மூன்றையும் கலந்து ஊற்ற வேண்டும். பிறகு இதில் 2 பஞ்சுத்திரிகளை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு 11 நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு ரூபாயாகவும் இருக்கலாம், இரண்டு ரூபாயாகவும் இருக்கலாம், ஐந்து ரூபாயாகவும் இருக்கலாம். ஐந்து ரூபாயாக இருந்தால் அதற்கு இன்னும் அதிக பலன் உண்டு. 11 நாணயங்களை எடுத்து அந்த தட்டில் வைத்து விடுங்கள். இந்த தீபம் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக எரிய வேண்டும். ஒரு மணி நேரம் முடிந்த பிறகு தீபத்தை குளிர வைத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தட்டில் பரப்பிய விபூதி குங்குமத்தை நாம் நெற்றியில் பூசிக்கொள்ளலாம். அந்த 11 நாணயங்களையும் எடுத்து பணம் வைக்கும் இடத்தில், கல்லாப்பெட்டியில், பீரோவில் வைத்து விடுங்கள். இப்படி வைப்பதன் மூலம் நமக்கு குபேர யோகம் உண்டாகும். அதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதயம் படிக்கலாமே:மங்கள யோகம் உண்டாக குரு வார பிரதோஷம்

குபேர யோகம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் குபேர பிரதோஷ நாளன்று இந்த முறையில் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் அவர்களுக்கு இருக்கக்கூடிய பணவரவு என்பது அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -