
பெரும்பாலான மனிதர்களுடைய வேண்டுதல் என்னவாக இருக்கிறது. குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும், வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும், வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் நொடிகள் அண்ட கூடாது, வீட்டிற்குள் கண் திருஷ்டி படக் கூடாது. நிலை வாசலில் குலதெய்வம் வாசம் செய்ய வேண்டும்.
குலதெய்வத்தின் அருளால், குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும், கூடுமானவரை மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு குடும்பத்திற்கு கிடைத்துவிட்டாலே போதும். அந்த குடும்பம் சுபிட்சம் பெறும். அதற்காக செய்யப்படக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டிற்குள் தங்கியிருக்கும் மொத்த கஷ்டமும் வெளியேறும். மகாலட்சுமி நிலையாக வந்து உங்கள் வீட்டில் குடியேறுவாள்.
இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை தேவையில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது செய்யலாம். காலை 6:00 மணிக்கு செய்யுங்கள். இல்லை மாலை 6:00 மணிக்கு மேல் செய்யுங்கள். ஒரு சின்ன தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அது எவர்சில்வர் தட்டு, பித்தளை செம்பு தட்டு எதுவாக இருந்தாலும் சரி, அதை கொண்டு போய் நிலை வாசல் படிக்கு வெளியில் வைத்து விடுங்கள்.
நிலைவாசல் காலுக்கு முன்பாக இந்த தட்டை வைத்து விட்டு, அதன் மேலே ஒரு மாயிலையை வைத்து, அந்த மாயிலுக்கு மேலே சுத்தமான மஞ்சள் தூளை பரப்பி அதற்கு மேலே ஒரு துண்டு சாதாரண கற்பூரம் வைத்து, அந்த கற்பூரத்தை ஏற்றி நிலை வாசலில் இருக்கும் குலதெய்வத்தையும் வாஸ்து தேவதையையும் மற்ற நல்ல தேவதைகளையும் மனதில் நினைத்து, எங்கள் வீட்டிற்குள் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
கற்பூரத்தை ஏற்றும்போது குலதெய்வத்தின் நாமத்தை 3 முறை சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு பழனி முருகன் குலதெய்வமாக இருந்தால் ‘ஓம் பழனி தண்டாயுதபாணியே போற்றி போற்றி’ அப்படி சொல்லலாம். பழனி முருகன் போற்றி போற்றி என்று சொல்லலாம். வீட்டிற்குள் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும். நிலை வாசலுக்குள்ளாக எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையக்கூடாது. அதற்கு நீ தான் துணையாக இருக்க வேண்டும் என்று குலதெய்வத்தை மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம் கண்களை மூடி நிலை வாசலுக்கு முன்பு நின்று, இந்த வழிபாட்டை செய்து, இந்த பிரார்த்தனையை வைத்தால் உங்கள் வீடு சுபிட்சம் பெரும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளும் வெளியேறிவிடும். மிக மிக எளிமையான பரிகாரம் தான் இது. மாயிலை உங்களுக்கு கிடைக்காத பட்சத்தில், வெற்றிலையை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பரிகாரம் முடிந்தவுடன், கற்பூரமெல்லாம் எரிந்து தானாக பூர்த்தி அடைந்தவுடன், தட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து பூஜையறையில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் பூஜை குப்பையோடு அந்த பொருட்களை சேர்த்து விடலாம்.
இது மார்கழி மாதம். இன்று மார்கழி 22ஆம் தேதி. மார்கழியில் இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இந்த ஒரு வாரம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்தாலும், நிச்சயம் வீட்டில் இருக்கும் துன்பங்கள் வெளியேறுவதை உங்களால் உணர முடியும். மார்கழி மாதம் கடந்து விட்டது.
தை மாதம் பிறந்து விட்டது எனும் பட்சத்திலும் உங்கள் வீட்டில் தீர்க்க முடியாத கஷ்டம் இருக்கிறது, வீட்டில் இருப்பவர்களுக்கு மனசு சரியில்லை, ஏதோ ஒரு பிரச்சனை, இனம் புரியாத சோகம் வீட்டில் இருக்கிறது, என்னும்போது இந்த கற்பூரத்தை ஏற்றி நிலை வாசல் படியில் குலதெய்வத்தை கூப்பிட்டு இந்த வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயம் துன்பம் தரும்.
இதையும் படிக்கலாமே: நகை கடன் தீரவும், அதிகளவில் நகை சேரவும் கூற வேண்டிய மந்திரம்
பிரச்சனை வரும்போது ஒரு நாள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். நம்பிக்கை இருந்தால் இதை முயற்சி செய்து பாருங்கள் செலவு இல்லாத பரிகாரம்தான். ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரமும் கூட. நம்பிக்கையோடு செய்ய வேண்டிய பரிகாரம் இதை தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.