
நம்முடைய வீட்டில் ஒரு சில பிரச்சினைகள் இருக்கும். குறிப்பாக நம்முடைய மன நிம்மதியை கெடுக்கக்கூடிய பிரச்சனை, சில பேரால் வரும். அது யார் ரூபத்தில் வேண்டும் என்றாலும் வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். சொல்லவே முடியாது. நேற்று வரை இந்த பிரச்சனையை பற்றி நாம் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.
ஆனால் இன்று பூதாகரமாக ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட என்ன செய்வது, என்று இங்கும் அங்கமாக அலைந்து திரிவோம். ஏதேதோ செய்வோம், யார் யாருக்கோ ஃபோன் செய்து பிரச்சனையை சொல்லுவோம். ஆனால் சாமி கும்பிட மாட்டோம். இறைவனிடம் அந்த பிரச்சனையை பொய் சொல்ல மாட்டோம்.
அந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் நமக்கு இறை வழிபாடு மறந்து போய்விடும். உங்களுக்கு இதுபோல ஏதாவது பிரச்சனை இருக்கிறதா, உடனடியாக உங்களுடைய வீட்டில் இந்த மூன்று விளக்கை ஏற்ற தொடங்கி விடுங்கள்.
காலை அல்லது மாலை உங்களுடைய சௌகரியும். ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தினமும் மாலை 6 மணிக்கு இந்த விளக்கை ஏற்றினால், பிரச்சனை முடியும் வரை, மாலை 6 மணிக்கு தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். தினமும் காலையில் இந்த விளக்கை ஏற்றினால் தினமும் பிரச்சனை முடியும் வரை காலையிலேயே இந்த விளக்கை ஏற்றிக் கொள்ளுங்கள். நேரத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு தாம்பூல தட்டில் மூன்று மண் அகல் விளக்குகள் வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு மண்ணகங்களுக்கு நல்லெண்ணெய், இரண்டாவது மண் அகல் விளக்கில் நெய் மூன்றாவது மண் அகல் விளக்கில் இலுப்பண்ணெய் ஊற்றி விடுங்கள். வரிசையாக அடுக்கி வைத்து விடுங்கள். கிழக்கு பார்த்தவாறு இந்த விளக்கு எரியட்டும். இதில் பஞ்சதியை போட்டு விளக்கு ஏற்றவும்.
குலதெய்வத்தை முழு மனதோடு நினைத்து இந்த விளக்கை ஏற்றி உங்களுக்கு இருக்கும் அந்த குறிப்பிட்ட பிரச்சனை என்ன அது உங்களுக்குத்தான் தெரியும். அந்த பிரச்சனையை சொல்லி அந்த பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் கூடிய சீக்கிரம் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
உங்கள் நிம்மதியை கெடுக்கும், எந்த விதமான பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கவும் இந்த விளக்கை ஏற்றலாம். இந்த பிரச்சனைக்கு அந்த பிரச்சனைக்கு என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. இந்த மூன்று விளக்கு ஏற்றினால் நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியானது கிடைக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: மகாளய பட்சம் சோமவார பிரதோஷம்
பிரச்சனையாக இருக்கிறது இன்றிலிருந்து இந்த விளக்கை ஏற்றலாம் என்று முடிவு செய்தால், எந்த நாள் கிழமை பார்க்காமல் இந்த விளக்கை ஏற்ற தொடங்கி விடலாம். உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் போது அன்றைக்கு இந்த விளக்கு ஏற்றுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். உங்கள் நிம்மதியை கெடுத்த அந்த பிரச்சனை வீட்டிலிருந்து உடனடியாக வெளியே ஓடிவிடும்.